இந்தியா உடனான உறவை முறிக்க முடியாது.. அமெரிக்காவுக்கு ரஷ்யா திட்டவட்ட பதில்!
Russia About Relationship with India | இந்தியா, ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் இந்தியா உறவை கைவிடவில்லை. இந்த நிலையில் இந்தியா உடனான உறவை முறிக்க முடியாது என்று ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு திட்வட்டமாக தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
மாஸ்கோ, செப்டம்பர் 16 : இந்தியா (India) உடனான உறவை முறிக்கா முடியாது என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ரஷ்யா (Russia) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரஷ்யா உடன் இந்தியா உறவு வைத்திருப்பது, வர்த்தகம் செய்வது ஆகியவற்றை அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இருப்பினும் இந்திய, ரஷ்யா உடனான உறவை தொடர்கிறது. இந்த நிலையில் தான், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா உடனான உறவை முறிக்க முடியாது – ரஷ்யா திட்டவட்டம்
இந்தியா தனது எண்ணெய் தேவைகளை ரஷ்யாவிடம் இருந்து பூர்த்தி செய்துக்கொள்கிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நல்ல உறவு நீடிக்கிறது. இந்த நிலையில் தான் இந்தியா ரஷ்யா உடன் உறவில் இருப்பதை கண்டித்து அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது. ரஷ்யா உடனான உறவை கைவிடும்படியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார். ஆனால், இந்தியா எந்த அச்சுறுத்தல்களையும் கண்டுக்கொள்ளாமல் ரஷ்யா உடனான உறவை தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க : எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய லாரி எலிசன்.. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்!
அறிக்கை வெளியிட்ட ரஷ்ய வெளியுறவுத் துறை
அமெரிக்காவின் இந்த நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கல் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக உள்ளது. ரஷ்யா – இந்தியா இடையேயான நீண்டகால நட்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது.
இதையும் படிங்க : துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்!
எந்த ஒரு முயற்சியும் தோல்வி அடையும் – ரஷ்யா
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை முறிக்க முடியாது. உறவை முறிக்க மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் முடியும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.