Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க கோரிய கோரிக்கையை இந்தியா நிராகரிக்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா (78), தண்டனை வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் சரணடையாவிட்டாலோ அல்லது கைது செய்யப்படாவிட்டாலோ தீர்ப்பை எதிர்த்து அவரால் மேல்முறையீடு செய்ய முடியாது. அதனால், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அவர் என்ன முடிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க கோரிய கோரிக்கையை இந்தியா நிராகரிக்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?
ஷேக் ஹசீனா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Nov 2025 23:23 PM IST

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்நாட்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருவரைக் கைது செய்வதற்கு இந்திய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உரிய நடைமுறை தேவைப்படுகிறது. ஷேக் ஹசீனாவைக் கைது செய்து பங்களாதேஷுக்கு நாடு கடத்தலாமா என்பதை இந்திய அரசு முடிவு செய்யும்.அந்தவகையில், இந்தியா இவ்விவகாரத்தில், அண்டை நாட்டின் அமைதி, ஜனநாயகம் மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்புகளுடனும் சுமூகமான முறையில் செயல்படுவோம் என வாக்குறுதி வழங்கியுள்ளது.

மேலும் படிக்க: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..

ஹசினா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியின் காரணமாக 15 ஆண்டுகால ஆட்சிக்குப் முடிவுகொடுத்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமால் இருவரும் முன்பே நீதிமன்றத்தால் தப்பிச் சென்றவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

ஹசீனா மனிதத்தன்மைக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மாணவர் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக ஹெலிகாப்டர், ட்ரோன், மற்றும் உயிர்கொள்ளும் ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதாகவும், கடுமையான பேச்சுகள் மூலம் சூழ்நிலையைத் தூண்டியதாகவும் கூறி இயற்கை மரணம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று டாக்காவின் சாங்கர்புல் பகுதியில் ஆறு மாணவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்ற வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், “இந்த கிளர்ச்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து குற்றங்களுக்கும் ஹசினாவே மையப் புள்ளி என்று கூறினார்.

அதேசமயம், ஹசினா, குற்றச்சாட்டுகள் அநியாயமானவை எனக் கூறி, தாம் மற்றும் கமால் “நாங்கள் நேர்மையாகவே செயல்பட்டோம், உயிரிழப்பினை குறைக்கவே முயன்றோம்” என்றும் தெரிவித்தார். “நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்; ஆனால் இதை மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் என சொல்வது உண்மை நிலையை தவறாக படிப்பதற்குச் சமம்,” என்றும் அவர் கூறினார். அவரது ஆதாவி லீக் கட்சி, தீர்ப்பை எதிர்த்து தேசிய முடக்கத்தை அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் கோரிக்கை:

இந்தத் தண்டனை பெற்ற இருவரையும் உடனடியாக எங்களுக்கு ஒப்படைக்க இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நாடு கடத்தல் ஒப்பந்தம் இந்தியாவில் இந்நேரத்தில் கட்டாயப் பொறுப்பை ஏற்படுத்துகிறது என்றும், மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்குவது “நட்பு இல்லாத செயல்” எனக் கருதப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவின் பதில்:

ஹசினாவுக்கு எதிரான தீர்ப்பை இந்தியா கவனத்தில் எடுத்ததாகவும், பங்களாதேஷின் அமைதி, ஜனநாயகம் மற்றும் நிலைத்தன்மை இந்தியாவுக்குப் பிரதானம் எனவும் வெளியுரவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவரை நாடு கடத்தும் கோரிக்கையைப் பற்றி இந்தியா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்தியா ஹசினாவை நாடு கடத்துமா?

பொதுவாக நாடுகடத்தல் கோரிக்கைகள் மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படும். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஹசினாவை ஒப்படைக்கும் வாய்ப்பு மிகக் குறைவே. அதற்கு காரணம், இந்திய சட்டம், இருதரப்பு நாடு கடத்தல் ஒப்பந்தம் இவை இரண்டும், அரசியல் நோக்கம் அல்லது அநியாயமாகக் கருதப்படும் கோரிக்கைகளை நிராகரிக்க இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க சுதந்திரத்தை வழங்குகின்றன.

மேலும் படிக்க:  ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!

இந்தியா – பங்களாதேஷ் நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

2013ல் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், 2016ல் திருத்தப்பட்டது. அதன் முக்கிய அம்சம் இரட்டை குற்றச்சாட்டு (Dual Criminality)—அதாவது குற்றம் இரு நாடுகளிலும் குற்றமாக இருக்க வேண்டும்.ஹசினாவுக்கு விதிக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகள் இந்த அடிப்படை நிபந்தனையை நிறைவேற்றினாலும், இந்தியாவில் அவை எந்த வடிவில் சட்டபூர்வமாக பொருந்தும் என்பது சிக்கல் உள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய பிரிவுகள்:

Article 8 – (‘Unjust or Oppressive’ Grounds) அநியாயமானது, தீங்கிழைக்கும் நோக்கில் செய்யப்பட்டு இருக்கிறது, நல்ல நம்பிக்கையின்றி முன்வைக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், இந்தியா நாடுகடத்தலை மறுக்கலாம். இவை அனைத்தும் அரசியல் துர்தஷ்டவசமான வழக்குகள் என கருதப்படக்கூடும்.

Article 6 – (‘Political Offence’ Clause) அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு நாடுகடத்தல் மறுக்கப்படலாம். ஆனால் கொலை, பயங்கரவாதம் போன்ற “கடுமையான குற்றங்கள்” அரசியல் குற்றங்களாக கருதப்பட முடியாது. ஹசினாவுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் இதற்குள் தான் வரும்.

Article 7 – (India Can Prosecute Instead) இந்தியா தானே விசாரணை நடத்தத் தயாராக இருந்தால், நாடு கடத்தலைத் தடுக்கலாம். இந்தியாவின் Extradition Act, 1962 இந்த சட்டத்தின் பிரிவு 29: கோரிக்கை அநியாயமானது, நல்ல நம்பிக்கையற்றது, அரசியல் நோக்கமுடையது, நீதிக்குத் தடையாக உள்ளது எனப் பட்டால், நாடு கடத்தலை நிராகரிக்க இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கிறது. மத்திய அரசு எந்த நிலையிலும் செயல்முறையை நிறுத்தவோ, வாரண்டை ரத்து செய்யவோ, அல்லது நபரை விடுதலை செய்யவோ முடியும்.