இறந்த செல்லப்பிராணிகளுடன் பேச வேண்டுமா?.. அப்போ இவ்வளவு தொகை செலுத்துங்கள்.. சீனாவில் புதிய வகை மோசடி!

Pet Lovers Scam in China | பெரும்பாலான மக்கள் செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டு இருப்பர். இந்த நிலையில், சீனாவில் செல்லப்பிராணிகளை மறைந்து வாடும் பொதுமக்களை குறி வைக்கும் மோசடி கும்பல், செல்லப்பிராணியுடன் பேச வைப்பதாக கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்கின்றன.

இறந்த செல்லப்பிராணிகளுடன் பேச வேண்டுமா?.. அப்போ இவ்வளவு தொகை செலுத்துங்கள்.. சீனாவில் புதிய வகை மோசடி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Aug 2025 07:51 AM

பீஜிங், ஆகஸ்ட் 15 : சீனாவில் (China) செல்லப்பிராணிகளின் பிரிவால் வாடும் பொதுமக்களை குறி வைத்து நூதன மோசடி நடைபெற்று வருகிறது. அதாவது, செல்லப்பிராணிகள் மறைந்த சோகத்தில் இருக்கும் உரிமையாளர்களிடம், அவர்களை இறந்த தங்களது செல்லப்பிராணிகளுடன் பேச வைப்பதாக கூறி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அங்கு ஏராளமான மக்கள் இந்த மோசடி வலையில் விழுந்துள்ளனர். இந்த நிலையில், இந்த மோசடி சம்பவங்கள் நடைபெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செல்லப்பிராணிகளுடன் பேச வைப்பதாக கூறி நூதன மோசடி

பெரும்பாலான மக்கள் தங்களுக்கென ஒரு செல்லப்பிராணியை வளர்க்க ஆசைப்படுகின்றனர். நாய், பூனை, மீன், கிளி என தங்களுக்கு பிடித்தமான விலங்குகளை அவர்கள் தங்களது செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். இவ்வாறு செல்லப்பிராணிகளை வளர்க்கும் பொதுமக்கள் அவற்றின் மீது வைக்கும் அதீத அன்பு காரணமாக அவற்றை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே நினைத்துக்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் பெரும்பாலான மக்களால் தங்களது செல்லப்பிராணிகளின் பிரிவை தாங்க முடிவதில்லை. இதனை பயன்படுத்தி தான் அந்த சீன கும்பல்கள் மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

இதையும் படிங்க : 10 ஆண்டுகள் மர்மம்.. கூட்டம் கூட்டமாக இறந்த நட்சத்திர மீன்கள்.. உண்மையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

5 கேள்விகளுக்கு ரூ.1,500, 6 மாதங்களுக்கு ரூ.36,800

சீனாவில் செல்லப்பிராணிகளை இழந்து வாடும் பொதுமக்களை குறிவைக்கும் மோசடி கும்பல்கள், அவர்களிடம் தங்களது இறந்துப்போன செல்லப்பிராணிகளிடம் பேச வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இறந்துப்போன செல்லப்பிராணியிடம் 5 கேள்விகள் கேட்க வேண்டும் என்றல் 128 யுவான் வசூலிக்கின்றனர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,500 ஆகும். இதேபோல், இறந்துப்போன செல்லப்பிராணியிடம் 6 மாதங்களுக்கு பேச வேண்டும் என்றால் 2,999 யுவான் வசூலிக்கின்றனர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,800 ஆகும்.

இதையும் படிங்க : இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய லக்கி லக்கி எரிமலை.. 20 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியாகும் தீக்குழம்பு!

பலர் தங்களது செல்லப்பிராணிகளின் மறைவு குறித்து சமூக ஊடககங்களில் பதிவிடும் நிலையில், அதனை பார்த்து இந்த மோசடி கும்பல்கள் தங்களது டார்கெட்டுகளை முடிவு செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களிடம் பேசி அவர்களை தங்களது வலைக்குள் விழ வைக்கின்றனர். பின்னர் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு செல்லப்பிராணிகள் பதில் அளிப்பதை போலவே பதில் கூறுகின்றனர். இது மோசடி என தெரியவந்த சிலர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.