நேபாளத்தில் நடைபெற்ற கோர விபத்து – தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி – பலர் படுகாயம்
Nepal Bus Cras : தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் மினி பேருந்து 150 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 7 பேர் உயரிழந்தனர். பேருந்தில் மீட்கப்பட்ட 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நேபாளத்தில் பேருந்து விபத்து
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் மினி பேருந்து 150 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 7 பேர் உயரிழந்தனர். பேருந்தில் மீட்கப்பட்ட 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையில் இருந்து 2 குழுக்களாக 24 பேர் கடந்த மார்ச் 7, 2026 அன்று ஆன்மீகா சுற்றுலா சென்றுள்ளனர். சென்னையில் இருந்து கங்கா காவிரி ரயில் மூலம் அலகாபாத் சென்ற அவர்கள் அங்கிருந்து திரிவேணி சங்கமம், அயோத்தி, முக்திநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சாமி தரிசனம் செய்தனர்.
நேபாளத்தில் நடைபெற்ற கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி
பின்னர் அங்கிருந்து நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டு தலமான மனகாமனா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து காந்தர் என்ற மலைப்பாதை வழியாக மினி பேருந்தில் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க : இந்திய கப்பல்களுக்கு எந்த சிறப்பு அனுமதியும் இல்லை.. ஈரான் விளக்கம்..
இதில் வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சி மின் நகரை சேர்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா, சிடிசி காலனியை சேர்ந்த பாபு ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை பொள்ளாச்சிக்கு கொண்டு வர உதவ வேண்டும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் எனவும் அவர்களது உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆன்மீக சுற்றுலா சென்ற நபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : ஹேப்பி நியூஸ்.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி.. இனி எரிபொருள் இருப்பு சீராகும்!
இந்த விபத்து சஹீத் லகன் நகராட்சியின் காந்தார் பகுதியில் நடந்ததாக கோர்கா மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ் குமார் ஷிரேஷ்டா தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சித்வான் மாவட்டத்தின் பாரத்பூரில் உள்ள சித்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற மனகாமனா என்ற கோவிலில் வழிபாடு முடித்து, தனாஹூன் மாவட்டத்தின் அனபுகைரேனி பகுதி நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கோர்கா மாவட்ட ஆட்சியர் துலசி பகதூர் ஷிரேஷ்டா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.