Viral Video : சாலையில் வாகனங்களே இல்லை.. அதிகாலை 4 மணிக்கும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் மக்கள்!
People In Dubai Strictly Follows Traffic Rules | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அதிகாலை 4 மணியிலும் துபாயில் பொதுமக்கள் எவ்வளவு ஒழுக்கமாக சாலை விதிகளை பின்பற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது நாட்டை எவ்வாறு பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கின்றனர், அவர்கள் அங்கு அரசு விதிக்கும் விதிகளை எவ்வாறு ஒழுக்கமாக கடைபிடிக்கின்றனர் என்பது குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், துபாயில் போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்கின்றனர் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அப்படி என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலையில் யாரும் இல்லை என்றாலும் விதிகளை பின்பற்ற வேண்டும்
ஒவ்வொரு நாட்டிலும் சில கடுமையான விதிகள் அமலில் இருக்கும். அவற்றில் முக்கியமான விதி தான் போக்குவரத்து விதி. வெளிநாடுகளில் இருப்பதை போலவே இந்தியாவிலும் சில கடுமையான போக்குவரத்து விதிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் அவற்றை பின்பற்றுவதே கிடையாது. இவ்வாறு பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் நடந்துக்கொள்வது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் பல வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். ஆனால், துபாயில் சாலையில் நிற்கும் ஒற்றை கார் எவ்வாறு சாலை விதியை கடை பிடிக்கிறது என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : இந்தியரிடம் ஜூசுக்கு பணம் வாங்க மறுத்த ஆப்கானிஸ்தானியர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் துபாய் சாலையில் ஒற்றை கார் நின்றுக்கொண்டு இருக்கிறது. அது குறித்து அந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளதாவது, துபாயில் 4 மணியாக இருந்தாலும் விதி விதி தான். அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சாலையில் வேறு எந்த வாகனங்கள் இல்லாத போதிலும் அந்த ஒற்றை கார் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நிற்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.