லாக்கர் பாதுகாப்புடன் Swiggy Instamart மூலம் டெலிவரி செய்யப்பட்ட தங்கம்.. வைரல் வீடியோ!
Swiggy Instamart Delivering Gold Coins | நேற்று (மே 1, 2025) அக்ஷய திருதைய என்பதால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் இணைந்து எடுத்த முன்னெடுப்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் கடைகளுக்கு பயணம் செய்து சிறிது நேரம் செலவழித்து தான் அந்த பொருட்களை வாங்க முடியும். ஆனால், தற்போது அவற்றுக்கொல்லாம் அவசியல் இல்லை. காரணம், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato) உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் பொதுமக்களின் வீடுகளை தேடியே உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் டெலிவரி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) மூலம் தங்கம் டெலிவரி செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
ஸ்விக்கி ஸ்டாமார்ட் மிகுந்த பாதுகாப்புடன் டெலிவரி செய்யப்பட்ட தங்கம்
தங்கத்தின் விலை எவ்வளவு தான் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், அதன் மீதமான பொதுமக்களின் ஆர்வம் குறைந்த பாடில்லை. அதன்படி, நேற்றைய தினம் (ஏப்ரல் 30, 2025) அக்ஷய திருதியை என்பதால் நகைக்கடகைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அக்ஷய திருதியை அன்று நகை வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளதால் அன்றைய தினம் ஒரு தங்க நாணயமாவது வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைகளுக்கு சென்று தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அக்ஷய திருதியை தினத்தன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் இணைந்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டது. அதாவது, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் பொதுமக்கள் கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் இருந்து 05 கிராம் முதல் 1 கிராம் தங்கம் வாங்கிக்கொள்ளலாம என்றும், 5 கிராம் முதல் 20 வெள்ளி வரை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இணையத்தில் வைரலாகும் கோல்டு டெலிவரி வீடியோ
View this post on Instagram
இந்த அறிவிப்பின் அடிப்படையில் பொதுமக்கள் இன்ஸ்டாமார்ட் மூலம் தங்கத்தை ஆர்டர் செய்துள்ளனர். அந்த தங்கத்தை லாக்கர் பாதுகாப்புடன் ஸ்விக்கி மற்றும் இன்ஸ்டாமார்ட் ஊழியர்கள் டெலிவரிக்காக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோவுக்கு கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்
இன்ஸ்டாமார்ட் ஊழியர்கள் தங்க நாணயங்களை டெலிவரிக்கு எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள ஒருவர், இன்னும் வேறு என்னவெல்லாம் டோர் டெலிவரி செய்யப்பட உள்ளதோ என நகைச்சுவகையாக பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் ஆச்சர்யமாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.