Viral Video : இந்தியர்களின் சகோதரத்துவம் எனக்கு பிடித்துள்ளது.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வைரல் வீடியோ!
Foreigner Praises Indian Brotherhood | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்தியர்களின் சகோதரத்துவம் மற்றும் அன்பு குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வெளிநாட்டவர் ஒருவர் இந்தியர்களின் சகோதரத்துவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களின் சகோதரத்துவம் எனக்கு பிடித்துள்ளது – வெளிநாட்டு சுற்றுலா பயணி
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவுக்கு வந்திருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக தங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து பேசுகின்றனர் என்றும் இந்தியர்களின் உறவு குறித்து வியந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : நாய் கடித்ததை தட்டி கேட்ட பெண்.. கன்னத்தில் அறைந்த உரிமையாளர்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, இந்தியாவில் ஒரு விஷயம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதாவது இங்கு இந்தியாவில் யாருக்கேனும், ஏதேனும் பிரச்னை என்றால் அந்த பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக யாருக்காவது போன் செய்து நடந்ததை கூறுகிறார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கான நபர்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து பிரச்னைகளுக்கும் யாரேனும் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகிறார். இந்தியாவில் தனக்கு அந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : திடீரென சரிந்து விழுந்த மேடை.. மணமக்களுடன் கீழே விழுந்த பாஜகவினர்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்தியா குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.