பூனை என நினைத்து சிறுத்தையை துரத்திய நாய்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சி!
Dogs Viral Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தெருவில் சுற்றித் திரிந்த சிறுத்தையை பூனை என நினைத்து தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
தெருக்களில் இருக்கும் நாய்கள் வெளி பகுதிகளில் இருந்து வரும் நாய்களை துரத்துவது, வாகனங்கள், மனிதர்களை துரத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வகையில், ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றை பூனை என நினைத்து நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சிறுத்தையை நாய்கள் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்தி விரிவாக பார்க்கலாம்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தை – பூனை என நினைத்து துரத்திய நாய்கள்
சமீப காலமாக வனத்தில் இருந்து வெளியேறும் சிங்கம், சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் சாலையில் நடந்துச்செல்வது, பொதுமக்களை தாக்குவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றை பூனை என நினைக்கும் தெரு நாய்கள் அதனை துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை.. நொடி பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
They thought it’s just a CAT😭
pic.twitter.com/EO6P9Z4ODi— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 15, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து செல்கிறது. அதனை பார்த்த அந்த பகுதி நாய்கள் அதனை பூனை என நினைத்து விரட்டி செல்கின்றன. சிறுத்தை ஒரு சந்துக்குள் செல்ல, எல்லா நாய்களும் அந்த சந்துக்குள் செல்கின்றன. ஒருசில நொடிகளில் அது பூனை இல்லை சிறுத்தை என தெரிந்ததும் நாய்கள் மொத்தமாக வெளியே ஓடி வருகின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : நடைபாதையில் கிடந்த குப்பை.. பொறுப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த தெரு நாய்க்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்ததாக ஒருபர் கருத்து பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.