Viral Video : என் மகளுக்காக எதையும் செய்வேன்.. தந்தையர் தின விழாவில் மகளுடன் நடனமாடிய தந்தை!
Dad Dances with Daughter at Father's Day | பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டார்கள். எப்படியாவது போராடி தங்கள் குழந்தைகள் விரும்புவதை அவர்கள் செய்வார்கள். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது மகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற தந்தையர் தின விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதற்கே முடியவில்லை. வேலை, தொழில் என தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற அவர்கள் மிக கடினமாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தந்தை ஒருவர் தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற தந்தையர் தின விழாவில் (Father’s Day Celebration) மகளுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இதுதான் இணையத்தில் வைரலாகும் மிக அழகான வீடியோ என கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
மகளுடன் அழகாக நடனமாடிய தந்தை – இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ
தந்தை – மகள் உறவு என்றாலே அது மிகவும் அழகான ஒன்றுதான். தங்கள் மகள்களின் மீது அதீத அனுபு கொண்டு இருக்கும் தந்தைகள் அவர்களது மகளிகளின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அந்த வகையில், தனது மகளின் ஆசைக்காக தந்தை ஒருவர் தனது மகளுடன் இணைந்து தந்தையர் தினத்தில் நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : இதுதான் உண்மையான நட்பு.. கண் தெரியாத பூனையுடன் விளையாடும் நாய் குட்டி.. வியக்கும் இணையவாசிகள்!
இணையத்தில் வைரலாகும் தந்தை – மகளின் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது மகளின் பள்ளியில் நடைபெறும் தந்தையர் தின விழாவில் பங்கேற்று நடனமாடுகிறார். இந்தி பாடல் ஒன்றுக்கு தந்தையும் மகளும் மிக அற்புதமாக்க நடனமாடுகிறார். அதனை பார்த்து விழாவிற்கு வருகை தந்திருப்பவர்கள் உற்சாகமாக கை தட்டியும், விசில் அடித்தும் நடனத்தை ரசிக்கின்றனர். எப்படியாவது மகளின் பள்ளி விழாவில் சிறப்பாக நடனமாட வேண்டும் என்பதற்காக அந்த தந்தை நிறைய பயிற்சிச்களை மேற்கொண்டிருப்பார் போல. அவ்வளவு தத்ரூபமாக அவர் நடனமாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து கூறியுள்ள ஒருவர் இவர் தான் சிறந்த தந்தை என தெரிவித்துள்ளார். இவ்வளவு சிறப்பாக ஆட வேண்டும் என்றால் அதிக பயிற்சி தேவை. அப்போது அந்த குழந்தையின் தந்தை இதற்காக தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருப்பார். அது மிகவும் பாரட்டுக்கு உரியது என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.