Viral Video : உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் ரோபோட்.. வைரல் வீடியோ!

Robot Serving Customers In Gurugram Restaurant | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குருகிராம் உணவகத்தில் ரோபோட் வாடிக்கையாளார்களுக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் ரோபோட்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

06 Mar 2026 22:36 PM

 IST

உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே செல்கிறது. அதன் காரணமாக, புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உணவகம் ஒன்றில் ரோபோட் ஒன்று, வாடிக்கையாளர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் ரோபோட்

உலகில் உள்ள பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் அம்சம் பயன்பாட்டில் உள்ளது. அவை வேலையை எளிதாக மாற்றுவதால் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ரோபோட்டிக் அம்சம் பயன்பாட்டில் இருந்தாலும், இன்னும் பரவலாக அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், குருகிராமில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோட் ஒன்று உணவு வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : முட்டையில் இருந்து வெளியே வந்த பிளாஸ்டிக்.. இளம் பெண் வெளியிட்ட ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வாடிக்கையாளர்கள் சிலர் உணவுக்காக காத்திருக்கின்றனர். அப்போது ஒரு ரோபோட் ஒன்று உணவை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களின் அருகில் வந்து நிற்கிறது. உடனே ஒருவர் அந்த ரோபோட்டில் வைத்து அனுப்பட்ட உணவை எடுத்துக்கொள்கிறார். அதனை தொடர்ந்து அந்த ரோபோட் அங்கிருந்து செல்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பாராட்டி பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி