நாடு தான் முக்கியம்.. திருமணத்தை ஒத்திவைத்த இளைஞர்.. என்ன காரணம்?
Man Postponed his Marriage for Participating in War Mock Drill | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பீகாரை சேர்ந்த ஒருவர் போர் ஒத்திகையில் பங்கேற்க திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) இந்தியா கையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான், இந்தியாவை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தும் இந்திய அரசு
இவ்வாறு இந்தியா – பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தற்காப்புகளை கற்பிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகள் ஒத்திகைகள் (War Safety Drill) நடைபெற்று வருகிறது. இதில், தாக்குதலில் போது சைரன் ஒலித்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், தாக்குதலில் காயமடைந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை
Airport Emergency Operation Plan activated at MBB Airport, Agartala for a full-scale mock drill today. Ensuring preparedness, swift response, and safety coordination across all stakeholders.#AAI pic.twitter.com/93AMZcPVzO
— MBB Airport, Agartala (@aaiagtairport) May 7, 2025
நாட்டு பற்றால் திருமணத்தை தள்ளி வைத்த இளைஞர்
பீகாரை மாநிலம் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்த சுஷாந்த் என்ற இளைஞருக்கு மே 07, 2025 அன்று திருமணம் நடைபெற இருந்தது. இதன் காரணமாக காலை 6 மணிக்கு மணமளின் வீட்டிற்கு அவர் ஊர்வலம் செல்ல தயாராக இருந்துள்ளார். அப்போது அவருக்கு அரசின் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதில் பங்கேற்க முடிவெடுத்த மணமகன் தனது திருமணத்தை இரண்டு மணி நேரம் வரை ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்த அவர், தேசிய பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட 244 மாவட்டங்களில் என்னுடைய மாவட்டமும் ஒன்று என்பதை நான் தெரிந்துக்கொண்டேன். அது முதலே போர் ஒத்திகையில் பங்கேற்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதன் காரணமாக திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு போர் ஒத்திகையில் பங்கேற்றேன். அதன் ஒரு பகுதியாக இருந்தது பெருமையான தருணம். எனக்கு திருமணத்தை விட நாடு தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.