Viral Video : தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் நபர்.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!

Man Drinks 7 Liters of Engine Oil Daily | ஒவ்வொரும் தங்களது உடல்நலத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப உணவு வகைகளை சாப்பிடுவர். ஆனால், கர்நாடகாவில் ஒருவர் தினமும் 7 முதல் 8 லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்கிறார்.

Viral Video : தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் நபர்.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

18 Sep 2025 23:23 PM

 IST

உலகம் முழுவதும் நடைபெறும் அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான  விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். நம்பவே முடியாத பல விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஒருவர் ஒரு நாளுக்கு 7 லிட்டர் இன்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழ்வதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தவறுதலாக ஒன்று அல்லது இரண்டு மூடி இன்ஜின் ஆயிலை குடித்தாலே பல வகையான உடல் உபாதைகள் ஏற்படும் நிலையில், அவர் தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடிப்பதாக வைரலாகி வரும் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு நாளுக்கு 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடிக்கும் ஐயப்ப பக்தர்

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உணவு முறையை பின்பற்றுவர். மருத்துவர்களின் அறிவுரையின்படி சிலர் உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளும் நிலையில், சிலர் தங்களுக்கு ஏற்றவாறு உணவு பொருட்களை எடுத்துக்கொள்வர். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைக்க உதவக்கூடிய உணவுகளையும், உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடையை அதிகரிக்க என தங்களுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக்கொள்வர். ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயிலையும், டீயையும் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.

இதையும் படிங்க : Viral Video : முட்டையில் மோனலிசா.. இப்படி ஒரு ஓவியமா?.. வியக்கும் நெட்டிசன்கள்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, கடந்த 33 ஆண்டுகளாக ஆயில் குமார் உணவே சாப்பிடாமல் இருந்து வருகிறார். சோறு, சப்பாத்திக்கு பதிலாக இவர் தினமும் 7 முதல் 8 லிட்டர் இன்ஜின் ஆயிலையும், டீயும் குடித்து வருகிறார். அவர் இத்தகைய ஆபத்தான உணவு பழக்கத்தை கொண்டு இருந்தாலும் அவருக்கு இதுவரை உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் ஒருமுறை கூட மருத்துவமனைக்கு சென்றதில்லை என்று கூறப்படுகிறது. அந்த நபர் ஐப்பன் மீது அதிக பக்தியுடன் உள்ள நிலையில் அதனால் தான் தன்னால் இத்தகைய அசாத்தியமான செயல்களை செய்ய முடிவதாக அவர் நம்புகிறார் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த நபர் இன்ஜின் ஆயிலை குடிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : நெற்றியில் சந்தனம், குங்குமம்… கன்னடத்தில் சரளமாக பேசிய ஆஸ்திரேலியர் – வைரல் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது செயலை கண்டு வியந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.