Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : கேஸ் சிலிண்டரில் திடீரென ஏற்பட்ட கசிவு – நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Gas Leak Horror : எல்பிஜி சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இருந்து ஒரு பெண்ணும் ஆணும் உயிர் பிழைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கேஸ் சிலிண்டரில் திடீரென ஏற்பட்ட கசிவு – நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சிலிண்டரில் ஏற்படும் கசிவினால் தீ விபத்து ஏற்படும் காட்சிகள்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 23 Jun 2025 21:45 PM

எல்பிஜி சிலிண்டரில் (LPG Cylinder) இருந்து எரிவாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இருந்து ஒரு பெண்ணும் ஆணும் அதிசயமாக உயிர் பிழைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  இதன் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்த காணொளியைப் பார்த்ததும், மக்களுக்கு பிரபல ஹாலிவுட் படமான ஃபைனல் டிஸ்டினேஷன் (Final Destination) படம் நினைவுக்கு கொண்டு வந்தது. அந்தப் படத்தை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது நடைபெற்ற சம்பவம் நடந்திருக்கிறது.

வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த சம்பவம் ஜூன் 18 , 2025 அன்று பிற்பகல் 3:15 மணிக்கு நடந்திருப்பது தெரியவருகிறது. இருப்பினும், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. வீடியோவில், ஒரு சமையலறை எரிவாயு சிலிண்டர் தரையில் கிடப்பதைக் காணலாம், அதிலிருந்து எரிவாயு வேகமாக கசிந்து கொண்டிருக்கிறது. காணொளியின் தொடக்கத்தில், ஒரு நடுத்தர வயது பெண் எரிவாயு கசிவை நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கசிவைத் தடுக்க முடியவில்லை.

கேஸ் சிலிண்டர் வெடிப்பது தொடர்பாக வைரலாகும் வீடியோ

 

 

View this post on Instagram

 

A post shared by Fire Fort Services (@firefort2024)

இதற்குப் பிறகு அந்தப் பெண் உடனடியாக உதவிக்காக வீட்டை விட்டு வெளியே ஓடுகிறாள், ஆனால் அதற்குள் முழு அறையும் எரிவாயுவால் நிரம்பி விடுகிறது. சில நிமிடங்கள் கழித்து அந்தப் பெண் ஒரு ஆணுடன் திரும்பி வருகிறாள். பின்னர் இருவரும் சேர்ந்து சிலிண்டரின் ரெகுலேட்டரை லாக் செய்ய  முயற்சிக்கின்றனர். அதன் பிறகு நடந்தது தான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகும் விதமாக அமைந்துள்ளது. அவர்கள் ரெகுலேட்டரை லாக் செய்யும்போது சமையலறைக்குள் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்கிறது, பின்னர் பெரிய தீப்பிழம்புகள் எழத் தொடங்கின, அது சிறிது நேரத்தில் முழு அறையையும் சூழ்கிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்கள்

வீட்டின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் திறந்திருந்ததால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றும், அதனால் பெரும்பாலான எரிவாயு வெளியேறிவிட்டதாகவும், வெடிப்பின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் உயிர் பிழைத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளி @firefort2024 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது, அதில் சமையலறையில் உள்ள எரிவாயு அடுப்பில் இருந்து தீப்பிழம்புகள் தொடங்குவதையும், அது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் பரவுவதையும் காணலாம்.