Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.. என்ன காரணம்?

தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.. என்ன காரணம்?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2025 15:43 PM IST

தஞ்சாவூரில் வண்ணாரப்பேட்டை, சிவகம்புரம், எட்டுக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டுக்கரை வெளிவட்டச் சாலையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டத்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும், அனைத்து மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு இடமளிக்க இது போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.

தஞ்சாவூரில் வண்ணாரப்பேட்டை, சிவகம்புரம், எட்டுக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டுக்கரை வெளிவட்டச் சாலையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டத்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும், அனைத்து மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு இடமளிக்க இது போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாலை மறியல் போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.