ஜப்பானில் வேலை செய்யும் இந்திய இளைஞரின் மாத ஊதியத்தால் சர்ச்சை.. குழப்பத்தில் நெட்டிச்னகள்!
Japan Salary vs Living Cost | பெரும்பாலான நபர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கின்றனர். அந்த வகையில், ஜப்பானில் வேலை செய்யும் இளைஞரி ஒருவர் தனது மாத சம்பளம் மற்றும் செலவு குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அது பேசுபொருளாக மாறியுள்ளது.

வைரல் வீடியோ
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு எப்படியாவது வெளிநாடுகளுக்கு சென்று அதிக சம்பளம் பெற்று தங்களது நிலையை முன்னேற்ற வேண்டும் என்பது தான் ஆசையாக உள்ளது. காரணம், இந்தியாவை விட சில உலக நாடுகளில் அதிக ஊதியம் கிடைக்கிறது. அதாவது அந்த நாட்டின் பணம் இந்திய மதிப்பில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அங்கு சராசரி ஊதியத்தை வாங்கினாலும், அது இந்தியாவில் பெரிய சம்பளமாக இருக்கும். இதற்காக ஏராளமான நபர்கள் இந்தியாவில் இருந்து துபாய், கத்தார், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு சென்று வேலை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ஜப்பானில் இந்திய இளைஞர் வாங்கும் சம்பளம்
இந்தியாவை சேர்ந்த விக்கி குமார் என்ற இளைஞர் ஜப்பானில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் ஜப்பானில் தான் வாங்கும் சம்பளம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு 2,35,000 யென் சம்பவளம். இந்திய மதிப்பில் ரூ.1.35 லட்சம். ஜப்பான் மொழி சான்றிதழ் இல்லாததால் தனது மாத ஊதியத்தில் இருந்து 20,000 யென் பிடிக்கப்படுபதாக கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு மாதம் 1,75,000 யென் சம்பளம் கிடைக்கும். இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம். ஆனால், அதற்கு பிறகு அவர் சொன்ன தகவல்கள் தான் கடும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மேம்பாலத்தின் மீது படுத்திருந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஜப்பான் மிகவும் விலை உயர்ந்த வாழ்வாதாரத்தை கொண்டுள்ளது. அங்கு ஒரு தனி மனிதர் ஒரு மாதத்தை கடக்க 1,50,000 யென் முதல் 3,50,000 யென் வரை செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.84,000 முதல் ரூ.1.96 லட்சம் வரை ஆகும். இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்கும் நபர்களின் வருமானத்தை போல தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : இந்திய ரயில் சேவை தான் சிறந்தது.. வெளிநாட்டு பெண்ணின் வீடியோ வைரல்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.