Viral Video : வழி தெரியாமல் தவித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி.. உதவிய இந்திய பெண்!
Indian Woman Helped Foreign Tourist | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இந்திய பெண் ஒருவர் வெளிநாட்டு பெண்ணுக்கு உதவி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். சில வீடியோக்கள் மன மகிழ்ச்சியை அளிக்கும் விதமாகவும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், வழி தெரியாமல் தொலைந்துப்போன வெளிநாட்டு பெண் ஒருவரை இந்திய பெண் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
வழி தெரியாமல் தொலைந்துப்போன வெளிநாட்டு பெண்ணுக்கு உதவிய பெண்
வெளிநாட்டில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களை சில இந்தியர்கள் ஏமாற்றுவது உள்ளிட்ட செயல்களை செய்வர். ஆனால், சில இந்தியர்களோ அவர்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர். அந்த வகையில், வழி தெரியாமல் தவித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரை இளம் பெண் ஒருவர் பத்திரமாக அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஐரோப்பாவில் உணவு டெலிவரி செய்யும் இந்தியருக்கு கிடைத்த பேரன்பு.. நெகிழ வைக்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ