Viral Video : முதுகில் பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு 6 மாடி ஏறிய டெலிவரி ஊழியர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Delivery Agent Video Goes Viral On Internet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெலிவரி ஊழியர் ஒருவர் மிகவும் கடினப்பட்டு பெரிய மூட்டையை தூக்கிக்கொண்டு 6 மாடி ஏறிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : முதுகில் பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு 6 மாடி ஏறிய டெலிவரி ஊழியர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published: 

03 Feb 2026 08:45 AM

 IST

பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவை நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு நாள்தோறும் பல வீடியோக்கள் சமூல வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் குற்ற சம்பவங்கள் மற்றும் அநீதிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில், டெலிவரி ஊழியர் ஒருவர் பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு சுமார் 6 மாடி ஏறி செல்ல வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு 6 மாடி ஏறிய டெலிவரி ஊழியர்

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் பல கடைகள் ஏறி, இறங்கி பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவது வரை அனைத்தும் அந்த பொருளை வாங்கும் நபரின் கடமையாக இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. ஆன்லைன் மூலம் எந்த பொருள் வேண்டுமோ அதனை ஆர்டர் செய்தால் அது வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும். இவ்வாறு பொருட்களை வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்வதில் டெலிவரி ஊழியர்கள் சில சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டெலிவரி ஊழியர் ஒருவர் எதிர்க்கொண்ட கடினமான சம்பவம் குறித்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இறந்த திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்த இருவர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டெலிவரி ஊழியர் ஒருவர் முதுகில் பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு ஏற முடியாமல் தடுமாறி தடுமாறி 6 மாடி ஏறி செல்கிறார். அந்த குடியிருப்பில் லிஃப்ட் வசதி இருந்தும் அவர் படிகட்டுகளில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..