சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ

Man Provokes Wild Lion : இந்தியாவில் வனவிலங்குகளை துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் இளைஞர் ஒருவர் சிங்கத்தை போட்டோ எடுக்க முயலும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி - வைரலாகும் வீடியோ

சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயற்சிக்கும் இளைஞர்

Published: 

04 Aug 2025 22:25 PM

குஜராத் (Gujarat) மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சிங்கத்தின் அருகே சென்ற ஒரு நபர் மீது சிங்கம் (Lion) தாக்க முயன்ற அதிர்ச்சி நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காட்டுவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி விதிமீறலாகவும் பார்க்கப்படுகிறது. வீடியோவில், ஒரு ஆண் சிங்கம் வேட்டையாடி, இரையை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் அதன் அருகில் செல்கிறார். அப்போது அவர் தனது மொபைலில் புகைப்படங்களை எடுக்கத் தொடங்குகிறார். பின்னணியில் மற்றவர்கள் அவரிடம் போகாதே என்று கத்தும் சத்தமும் கேட்கிறது. சிங்கம் முதலில் அமைதியாக இருந்தாலும், பின்னர் திடீரென அவர் மீது பாய்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் அங்கிருந்து ஓடுகிறார். நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இது மிகக் குறுகிய தூரத்தில் நடந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும், அந்த நபர் எந்தவித காயமும் இன்றி தப்பியிருக்கிறார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் அவருடைய தைரியத்தை பாராட்டும் அதே வேளையில் மற்றும் சிலர் அவரது முட்டாள்தனத்தை விமர்சிக்கின்ரனர். அதில் ஒருவர் “இது தன்னையும் மற்றவர்களையும் ஆபத்தில் தள்ளும் செயல் என கடுமையாக எச்சரிக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : நடைபாதையில் கிடந்த குப்பை.. பொறுப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி!

சிங்கத்தை துன்புறுத்தும் நபரின் வீடியோ

 

வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

இந்த வகையான செயல்கள் காட்டுவிலங்குகளை தொந்தரவு செய்ததாக கருதப்படும் நிலையில், அது இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிகப்பெரிய குற்றமாகும். தற்போது வனத்துறை அதிகாரிகள் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் வீடியோ வைரலான நிலையில், அதன் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மனிதர்களை போல இரண்டு கால்களில் நின்று இரையை நோட்டமிட்ட சிறுத்தை.. வைரல் வீடியோ!

வன விலங்களுகளை பாதுகாப்பது நமது கடைமை

இந்த சம்பவம் வன விலங்குகளை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அதனை நாம் தொந்தரவு செய்யாத வரையில் அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. மீறி வன விலங்குகளை இயற்கையான சூழலில் இருக்கும்போது  தொந்தரவு செய்வது மனிதர்களுக்கே ஆபத்தாக முடியும். இது போன்ற செயல்களை தவிர்த்து, பிற உயிரினங்களின் சுதந்திரத்தை மதிக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.