Viral Video : குழந்தையை போல மகிழ்ச்சியாக பந்து விளையாடிய யானை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
Elephant Plays with Ball | யானைகள் குறும்புத்தனம் செய்வதை போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் யானை ஒன்று பிளாஸ்டிக் பந்தை வைத்து குழந்தை போல் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
யானைகளின் உருவத்திற்கும் அவற்றின் குணத்திற்கும் சம்மந்தமே இருக்காது. காரணம், யானைகள் பார்ப்பதற்கு மிகவும் ராட்சத தோற்றம் கொண்டிருக்கும். ஆனால், அவை மிகவும் சாதுவான பிராணிகள். யானைகளுக்கு கோபம் வந்தால் எப்படி கட்டுப்படுத்த முடியாதோ அதே அளவுக்கு அவற்றின் குறும்பு தனத்தையும் கட்டுப்படுத்த முடியாது. யானைகள் குழந்தைகளை போல குறும்பு செய்யும். இவ்வாறு யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் சில இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது யானை ஒன்று பிளாஸ்டிக் பந்துடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிளாஸ்டிக் பந்தை வைத்து விளையாடும் யானை – கியூட் வீடியோ
யானைகள் மிகவும் சாதுவான மிருகம் ஆகும். அதே சமயம் யானைகளின் கோபத்திற்கு ஆளானால் நிச்சயம் அபாயம் உள்ளது. யானைகளுக்கு மனிதர்களை போலவே அதிக உணர் திறனும் உள்ளது. இதன் காரணமாக அவை மிகுந்த உணர்ச்சியுடன் இருக்கும். யானைகளை தொந்தரவு செய்வதை போல் நடந்துக்கொண்டால் அவை கடும் கோபம் கொள்ளும். மற்றபடி, யானைகள் குழந்தைகளை போல குணம் கொண்ட உயிரினங்கள். அந்த வகையில் யானை ஒன்று குழந்தையை போல பந்து விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : குடும்பத்துடன் சஃபாரி சென்ற 13 வயது சிறுவன்.. மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் யானையின் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் யானை ஒன்று பிளாஸ்டிக் பந்தை வைத்து விளையாடுகிறது. பந்தின் மீது படுத்து, உருண்டு விளையாடுவது, பந்தை கால்களாலும், தும்பி கைகளாலும் தள்ளி விளையாடுவது உள்ளிட்ட செயல்களை செய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : மலைப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞர் – அடுத்த நடந்த ட்விஸ்ட்
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். யானைகள் உருவத்தில் தான் பெரியதாக இருக்கும் ஆனால், அவை குணத்தில் குழந்தைகளை போல என ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்ப்பதற்கு ஒரு குழந்தை பந்து விளையாடுவதை போல் உள்ளதாக மற்றொருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இவ்வாறு பலரும் யானையின் குழந்தை தனத்தையும், குறும்பு தனத்தையும் குறித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.