சூம் செயலி பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை.. மத்திய அரசு முக்கிய தகவல்!

Zoom Vulnerability Alert | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சூம் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சூம் செயலியில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அதன் காரணமாக டேட்டா திருட்டு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

சூம் செயலி பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை.. மத்திய அரசு முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Nov 2025 18:08 PM

 IST

ஒருவரை நேரில் சந்தித்து ஏதேனும் ஒரு விஷயம் குறித்து ஆலோசனை நடத்தும் காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான அலுவலகங்கள், தொழில் செய்யும் நபர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரும் செயலிகளை பயன்படுத்தி ஆன்லைனில் அலோசனை மேற்கொள்கின்றனர். இதற்காக கூகுள் மீட் (Google Meet), சூம் (Zoom) உள்ளிட்ட செயலிகளும் உள்ளன. இந்த செயலிகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில், சூம் செய்லியில் மிகப்பெரிய ஆபத்து ஒன்று உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூம் செயலியில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் – மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான (Indian Government Cyber Security Agency) CERT-In, சூம் செயலி குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, விண்டோஸ் (Windows), மேக் (Mac) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) என எந்த செயலியில் சூம் பயன்படுத்தினாலும் அதனை இந்த சிக்கல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிக்கல் மூலம் டேட்டா திருட்டு உள்ளிட்ட மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : New Aadhaar App: மத்திய அரசு பலே திட்டம்! அறிமுகமான புதிய ஆதார் ஆப்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன?

இது உங்களுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும்

6.5.10-க்கு முந்தைய வர்ஷன் சூம் செயலியை கொண்டுள்ளவர்கள் இந்த சிக்கலை சந்திக்க கூடும் என CERT-In எச்சரித்துள்ளது. இந்த வர்ஷனுக்கு முந்தைய சூம் செயலியின் லிங்கை கிளிக் செய்தாலோ அல்லது அந்த செயலியை பயன்படுத்தி ஏதேனும் மீட்டிங்கில் இணைந்தாலோ இந்த மால்வேர் உங்களது டிவைசை பாதிக்கும் என்றும், இதன் காரணமாக டேட்டா திருட்டு உள்ளிட்ட சிக்கல்களை பயனர்களை சந்திக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஏஐ இடம் மருத்துவ ஆலோசனைகள் கேட்காதீர்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. காரணம் என்ன?

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இந்த சிக்கலில் நீங்களும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் செய்ய வேண்டியது ஒன்றுதான். அதாவது 6.5.10-க்கு முந்தைய வர்ஷன் சூம் செயலிகளை அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே செயலிக்குள் சென்று உங்களது சூம் செயலியை அப்டேட் செய்யும் பட்சத்தில் உங்களால் இந்த சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!