WhatsApp : வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள ஸ்கிரீன் மிரரிங் பிராடு.. எச்சரிக்கும் ஒன்கார்டு நிறுவனம்!
WhatsApp Screen Mirroring Fraud | வாட்ஸ்அப் செயலி மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடி சம்பவம் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வாட்ஸ்அப் (WhatsApp) செயலிகள் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் மூலம் புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக ஒன்கார்டு (OneCard) நிறுவனம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதாவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட கூடிய வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு (WhatsApp Screen Mirroring Fraud) அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த மோசடி மூலம் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடப்பட்டு நிதி இழப்பை சந்திக்க கூடிய நிலை ஏற்படலாம். எனவே இந்த மோசடி குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு என்றால் என்ன?
வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு என்பது, வாட்ஸ்அப்பை ஸ்கிரீன் செய்வதன் மூலம் நடைபெறும் மோசடி ஆகும். அதாவது மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றி தங்களது வாட்ஸ்அப் கணக்குகளை ஸ்கிரீன் செய்ய வைப்பார்கள். அவ்வாறு அந்த நபர் ஸ்கிரீன் செய்யும் பட்சத்தில் ஓடிபி, வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் தகவல் திருட்டு, பண இழப்பு உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க : WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் ஸ்கிரீன் மிரரிங் பிராடு எப்படி நடைபெறுகிறது?
மோசடிக்காரர்கள் தாங்கள் டார்கெட் செய்துள்ள நபரை தொடர்புக்கொண்டு நம்பகத்தன்மை உடன் பேசுவார்கள். உதாரணமாக வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்கள் வங்கி கணக்கில் இந்த சிக்கல் உள்ளது என கூறுவார்கள். அதனை கேட்கும் பொதுமக்கள் உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும் என விரும்புவார்கள். இந்த மனநிலையை பயன்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பொதுமக்களிடம் தங்களது வாட்ஸ்அப் கணக்கை ஸ்கிரீன் மிரரிங் செய்ய கூறுவார்கள். அதனை நம்பி ஸ்கிரீன் மிரரிங் செய்யும் பட்சத்தில் தேவையான தகவல்களை திருடுவார்கள். இவ்வாறு திருடப்படும் தகவல்கள் மூலம் மோசடிகளை அரங்கேற்றுவார்கள்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்
இன்னொரு வகையிலும் இந்த மோசடி நடைபெறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, Keylogger அல்லது Keyboard Logger ஆகிய மென்பொருட்களை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு மென்பொருட்களை மொபைல்போன்களில் பதிவிறக்கம் செய்யும் மோசடிக்காரர்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொற்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.