WhatsApp : வாட்ஸ்அப்பில் வந்த கால் ஷெட்யூலிங் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Call Scheduling | வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், தனது பயனர்களின் வசதிக்காக அந்த நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கால் ஷெட்யூலிங் அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் வந்த கால் ஷெட்யூலிங் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

21 Aug 2025 12:29 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்கு மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், அதில் பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காலிங் சேவையில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குரூப் கால்களை (Group Calls) மிக எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் இந்த புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கால் ஷெட்யூலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கால் ஷெட்யூலிங் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

கூகுள் மீட் (Google Meet) மற்றும் ஜூம் (Zoom) போன்ற செயலிகளுக்கு இணையாக வாட்ஸ்அப் அட்டகாசமன அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கால் ஷெட்யூலிங் (Call Scheduling) அம்சத்தை தான் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் குரூப் காலை முன்கூட்டியே திட்டமிட முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்தி கால் ஷெட்யூலிங் செய்யும் பட்சத்தில் தனி நபர்களையோ அல்லது குழு உறுப்பினர்களையோ இந்த காலில் பேச அழைப்பு விடுக்க முடியும். முன்கூட்டியே குழு உரையாடல்கள் குறித்து முடிவு செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதீங்க – எச்சரிக்கும் மத்திய அரசு – காரணம் என்ன?

கால் ஷெட்யூலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  1. வாட்ஸ்அப்பில் கால் ஷெட்யூலிங் அம்சத்தை பயன்படுத்த முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் உள்ள கால்ஸ் (Calls) என்ற டேபில் உள்ள + பட்டனை தட்ட வேண்டும்.
  3. அதில் தோன்றும் Schedule Call என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  4. அதனை பயன்படுத்தி யாருடன் கால் பேச விரும்புகிறீர்களோ அவர்களை தேர்வு செய்து கால் ஷெட்யூல் செய்யலாம்.

கால் ஷெட்யூலிங் அம்சத்தின் கூடுதல் சிறப்புகள்

இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களுக்கு வரவிருக்கும் அழைப்புகள் குறித்து தெரிந்துக்கொள்ள முடியும்.  நீங்கள் யாரை அழைப்பில் இணைக்க விரும்புகிறீர்களோ அவர்களுக்கு பங்கேற்பாளர்களின்  பட்டியல் மற்றும் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும். அதனை அவர்கள் தங்களது தனிப்பட்ட காலெண்டர் சேர்க்கவும், மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் இந்த கால் ஷெட்யூலிங் அம்சத்தை பயன்படுத்தி கால் ஷெட்யூலிங் செய்யும்போது அது சம்மந்தப்பட்ட நபருக்கு முன்கூட்டியே சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.