அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!
Samsung Galaxy A07 5G Smartphone Introduced In India | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி
இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் சாம்சங் (Samsung). சாம்சங் நிறுவனத்திற்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை (Samsung Galaxy A07 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன்
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 720 மற்றும் 1600 PLS LCD டச் ஸ்கிரீன் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்த செயலிகள் உங்களை உலவு பார்க்கலாம்.. உஷாராக இருங்கள்!
சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
Make all your photos #MoreAwesome with #GalaxyA07 5G. Capture the finest details, even in extreme zoom and relive those memories anytime! 🌴🌄
Buy now: https://t.co/zjpKQJPNuc#GalaxyASeries #Samsung pic.twitter.com/NDjiGtG0PV
— Samsung India (@SamsungIndia) February 6, 2026
இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,000 mAh பேட்டரியை கொண்டுள்ள நிலையில், 25 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆப்பிள் காதலர் சிறப்பு சலுகை.. ஐபோன்கள், மேக் மற்றும் டேப்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க எஸ்பிஐ, எச்டிஎஃப்சி அல்லது ஆக்சிஸ் கிரெடிட் கார்டை வாங்கி பயன்படுத்தும் நிலையில், ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.