Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!

Cyber Crimes Of 2025 | இந்தியாவில் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை குறைந்தபாடில்லை. இந்த நிலையில், 2025-ல் பொதுமக்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பறித்த சைபர் குற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

23 Dec 2025 00:22 AM

 IST

தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) பல வேலைகளை மிகவும் எளிதானதாக மாற்றி வருகிறது. முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை எல்லாம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சி பயனுள்ள பல அம்சங்களை வழங்கினாலும், அதில் ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. அதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏராளமான மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சைபார் குற்றங்களை (Cyber Crimes) கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில், 2025-ல் இந்தியாவில் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மோசடி சம்பங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்

2025-ல் முதலீட்டு மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, ஏஐ வாய்ஸ் கால் மோசடி என பல வகையான மோசடிகளால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

முதலீட்டு மோசடி

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் தங்களது பணத்தை இழந்த மோசடி தான் இந்த முதலீட்டு மோசடி (Investment Scam). தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும் நிலையில், அதனை மையப்படுத்தி பொதுமக்களிடம் நடைபெறுவது தான் இந்த மோசடி. வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட செயலிகள் மூலம் பொதுமக்களை டார்கெட் செய்யும் மோசடி கும்பல், ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு செய்ய வைப்பர். முதலீடு செய்த நபர்கள் தங்களது பணத்தை திருப்பி எடுக்கு முயற்சி செய்யும்போது மோசடி கும்பல் அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்துவிட்டு தலைமறைவாகிவிடும். இந்த மோசடியில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான சிறந்த லேப்டாப்கள்.. லிஸ்ட் இதோ!

வேலைவாய்ப்பு மோசடி

2025-ல் பொதுமக்களை அதிகம் பணத்தை இழக்க செய்த மோசடி தான் இந்த வேலைவாய்ப்பு மோசடி (Employement Scam). வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் விளம்பரங்களை பதிவிடும் மோசடி கும்பல் அதன் மூலம் பொதுமக்களை டார்கெட் செய்யும். குறைந்த நேர வேலை, அதிக ஊதியம் என பல்வேறு வாக்குறுதிகளை இந்த மோசடி கும்பல்கள் வழங்கும். சில சமயங்களில் வேலைக்கு சேறுவதற்கு முன்னதாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறும். அவ்வாறு பணத்தை செலுத்தும் நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி கும்பல்கள் தலைமறைவாகிவிடும். இந்த வகை மோசடிகளிலும் ஏராளமான மக்கள் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

ஏஐ வாய்ஸ் மூலம் மோசடி

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை வளர்ச்சிக்காக பலர் பயன்படுத்தினாலும், சிலர் அதனை தவறான வகையில் பயன்பட்டுத்தி மோசடிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் நடைபெற்ற மோசடி தான் இந்த செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் மோசடி (Artificial Intelligence Voice Scam). அதாவது, ஏஐ வாய்ஸ் மூலம் பிரபலங்கள், பெண்கள் உள்ளிட்ட குரல்கள் மூலம் பேசி ஏமாற்றி பணம் பரிப்பர். சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களை போல பேசி அவசரத்திற்கு பணம் வேண்டும் என கேட்டும் மோசடி பெறுவர். இத்தகைய மோசடிகளிலும் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான 4 Foldable Smartphones.. சிறப்பு அம்சங்கள் என்ன?

வங்கி மோசடிகள்

வங்கிகள் குறுஞ்செய்தி அனுப்புவதை போல மோசடி கும்பல்கள் போலி குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்வது தான் இந்த வங்கி மோசடி (Bank Scam). அதாவது, வங்கியில் எதாவது சேவை கட்டணம் செலுத்த வேண்டும், தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என கூறி லிங்க் அனுப்புவர். அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் அதன் மூலம் வங்கி கணக்கை ஹேக் செய்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்திவிடுவர். இந்த மோசடியில் ஏராளமான பொதுமக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

டிஜிட்டல் கைது மோசடி

2026-ல் பெரும்பாலான நபர்கள் தங்களது பணத்தை இழந்தது தான் இந்த டிஜிட்டல் கைது மோசடி (Digital Arrest Scam). அதாவது, சில நபர்களை தேர்வு செய்து அவர்களை தொடர்ப்புக்கொள்ளும் மோசடிக்காரர்கள் தங்களை அதிகாரிகள் போல அறிமுகம் செய்துக்கொள்வர். அந்த நபர்கள் சட்ட விரோத பண பரிவர்த்தனை செயல்களில் ஈடுபட்டதாகவும், அவர்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறும். பிறகு, வழக்குகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்று கூறுவர். அதனை நம்பி அந்த நபர் பணம் அனுப்பும் பட்சத்தில், இணைப்பை துண்டித்துக்கொள்வர். 2025-ல் பெரும்பாலான பொதுமக்கள் இந்த மோசடியில் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை