Oppo Find X9, Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Oppo Find X9, X9 Pro Smartphones Launched | ஓப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓப்போ ஃபைண்ட் எஸ்க் 9 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Oppo Find X9, Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

ஓப்போ ஸ்மார்ட்போன்கள்

Updated On: 

30 Oct 2025 12:58 PM

 IST

ஓப்போ (Oppo) நிறுவனம் டபட்ஜெட் ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்வதால் அது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓப்போ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மாட்ர்ட்போன்கள் அறிமுகம்

ஓப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. அந்த சீரீஸில் தான் தற்போது இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் டைமன்சிட்டி 9500 பிராசசரை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 120Hz OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 7,500 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளன.

இதையும் படிங்க : இனி ஏஐ மூலம் உங்கள் இன்ஸ்டா ஸ்டோரியை மாஸாக மாற்றலாம்.. எப்படி?

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 மற்றும் எக்ஸ் 9 ப்ரோ – சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த ஓப்போ பைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சில்க் வைட் மற்றும் டைட்டானியம் சார்கோல் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் வருகிறது ஏஐ.. இனி இந்த சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்!

விலை பட்டியல்

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 999 யுரோவாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,02,800 ஆகும். இதேபோல ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1,299 யுரோவாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,33,600 ஆகும்.