7,000mAh பேட்டரி… 50எம்பி கேமரா… அறிமுகமாகும் ஓப்போ எஃப்31 சீரிஸ் போன்கள் – விலை எவ்வளவு? சிறப்பம்சங்கள் என்ன?

Oppo F31 : இந்தியாவில் விரைவில் ஓப்போ எஃப்31 சீரிஸ் போன்கள் அறிமுகமாகவுள்ளது. இந்த போன்கள் 7,000mAh பேட்டரி, 50 மெகா பிக்சல் OIS கேமரா என பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஓப்போ சீரிஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் நாள், விலை குறித்து பார்க்கலாம்.

7,000mAh பேட்டரி...  50எம்பி கேமரா... அறிமுகமாகும் ஓப்போ எஃப்31 சீரிஸ் போன்கள் - விலை எவ்வளவு? சிறப்பம்சங்கள் என்ன?

ஓப்போ எஃப்31 சீரிஸ் போன்கள்

Published: 

15 Sep 2025 16:38 PM

 IST

இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றான ஓப்போ (Oppo) நிறுவனம் புதிய எஃப்31 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ எஃப்31 5ஜி (Oppo F31 5G), ஓப்போ எஃப் 31ப்ரோ, ஓப்போ எஃப்31 புரோ 5ஜி, ஓப்போ எஃப்31 புரோ பிளஸ் 5ஜி ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவை அனைத்தும் 7000mAh கொண்ட பெரிய பேட்டரி மற்றும் 50 மெகா பிக்சல் OIS கேமரா கொண்டதாகும். இந்த கட்டுரையில் இந்த மூன்று மாடல்களின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓப்போ எஃப்31 சீரிஸ் போன்களின் விலை மற்றும் விற்பனைத் தேதி

ஓப்போ எஃப்31 5ஜி

 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஓப்போ எஃப்31 5ஜி போனின் விலை ரூ. 22,999 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.24,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் மிட்நைட் புளூ, கிளௌட் கிரீன், ப்ளூம் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த போன் இந்தியாவில் செப்டம்பர் 27, 2025 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

ஓப்போ எஃப்31 புரோ 5ஜி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.26,999 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.28,999 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.30,999 ஆகவும் விற்கப்படுகின்றன. இந்த போன் டிசெர்ட் கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த போன் இந்தியாவில் செப்டம்பர் 19, 2025 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஓப்போ எஃப்31 புரோ பிளஸ் 5ஜி

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.32,999  எனவும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட  போனின் விலை ரூ.34,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஜெம்ஸ்டோன் ப்ளூ, ஹிமாலயன் ஒயிட், ஃபெஸ்டிவ் பிங்க ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த போன் இந்தியாவில் செப்டம்பர் 19, 2025 முதல் சந்தையில் கிடைக்கும்.

விற்பனை ஓப்போ ஆன்லைன் ஸ்டோர் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆன்லைன் ரீடெயில் கடைகளிலும் கிடைக்கும்.

ஓப்போ எஃப்31 5ஜி போனின் வசதிகள்

  • இந்த போன் 6.5 இஞ்ச் எச்டி AMOLED டிஸ்பிளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • MediaTek Dimensity 6300 SoC பிராசசர்
  • 8 ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்
  • கேமரா பின் பக்கம் 50 எம்பி மற்றும் 2 எம்பி, முன்பக்கம் 16எம்பி செல்ஃபி கேமரா
  • 7,000 எம்ஏஎச் மற்றும் 80 வாட்ஸ் பவர் சார்ஜிங்
  • IP69, IP68, IP66 ரேட்டிங் மற்றும் Armour Body பாதுகாப்பு
  • Under-display Fingerprint, Wi-Fi 5, Bluetooth 5.4

ஓப்போ எஃப்31 புரோ 5ஜி

  • இந்த போனின் 6.5 இஞ்ச் AMOLED டிஸ்பிளே, daptive Refresh Rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • daptive Refresh Rate பிராசசர்
  • அதிகபட்சம் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • கேமரா பின் பக்கம் 50 எம்பி மற்றும் 2 எம்பி, முன் பக்க்ம் 16 எம்பி செல்ஃபி கேமரா
  • பேட்டரி 7000எம்ஏஎச் மற்றும் 80 வாட்ஸ் சார்ஜிங்
  • Wi-Fi 6, Bluetooth 5.4

இதையும் படிக்க : இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஓப்போ எஃப்31 புரோ பிளஸ் 5ஜி

  • 6.8 இஞ்ச் BOE AMOLED, Full HD+ டிஸ்பிளே
  • Qualcomm Snapdragon 7 Gen 3 + Adreno GPU பிராசசர்
  • கேமரா பின் பக்கம் 50 எம்பி மற்றும் 2 எம்பி, முன் பக்கம் 16எம்பி
  • 7,000mAh பேட்டரி மற்றும் 80W SuperVOOC சார்ஜிங் வசதி
  • IP66/68/69 ratings, Armour Body பாதுகாப்பு அம்சங்கள்