இனி யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வந்தது புதிய அம்சம்!

New Update For WhatsApp Group Chat | முன்பெல்லாம் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆனால், தற்போது மெட்டாவின் புதிய அம்சம் மூலம் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறுவது குழுவின் அட்மின் தவிர வேறு யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாது.

இனி யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வந்தது புதிய அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Dec 2025 22:28 PM

 IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்களை  வாட்ஸ்அப் கொண்டுள்ள நிலையில், அதனை பலரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மெட்டா அவ்வப்போது வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழு சாட்டில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா

வாட்ஸ்அப் செயலியில் தனிநபர் சாட்டிங் (Personal Chatting), குழு (Group), கம்யூனிட்டி (Community) என பல அம்சங்கள் உள்ளது. இவை மூன்றுமே பயனர்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இவற்றில் மெட்டா பல்வேறு அசத்தலான மற்றும் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது குழு சாட்டில் ஒரு அட்டகாசமான அம்சத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் யாருக்கும் தெரியாமல் நீங்கள் எந்த குழுவில் இருந்து வேண்டுமானாலும் நீங்கிவிடலாம்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை என்ன?

இனி யாருக்கும் தெரியாமல் குழுவில் இருந்து வெளியேறலாம்

வாட்ஸ்அப்பில் இருக்கும் நபர்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்னை என்றால் எது அதிகமான குழுக்களில் இணைக்கப்படுவது தான். அனைத்திற்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் அனைவரும் இணைக்கப்படுவது ஒரு வழக்கமாக உள்ளது. இது சிலருக்கு சாதாரணமாக இருந்தாலும், சிலருக்கு சற்று தொந்தரவானதாக இருக்கும். குழுவில் இருந்து வெளியேறினால் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் பலரும் அந்த குழுக்களில் இருப்பர். தற்போது இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்டா ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுனமானது விவோ எக்ஸ் 300 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்!

அதாவது இனி பயனர்கள் யாருக்கும் தெரியாமல் குழுக்களில் இருந்து வெளியேறும் அசத்தல் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. ஒரு நபர் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறுகிறார் என்றால் அது அந்த குழுவின் அட்மினுக்கு மட்டுமே தெரிய வரும். தற்போது உள்ளதை போல அனைவருக்கும் தெரிய வராது. இதன் மூலம் தேவையற்ற மற்றும் பிடிக்காத குழுக்களில் இருந்து தயக்கமில்லாமல் வெளியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..