படித்ததும் குறுஞ்செய்திகள் மறைந்துவிடும்.. புதிய அம்சத்தை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!

Messages Will Disappear The Moment It Reads | வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், படித்த உடனே குறுஞ்செய்திகள் மறைந்துவிடும் முக்கிய அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் நிலையில், விரைவில் அமலுக்கு வர உள்ளது.

படித்ததும் குறுஞ்செய்திகள் மறைந்துவிடும்.. புதிய அம்சத்தை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Apr 2026 13:30 PM

 IST

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இவ்வாறு மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப், தங்களது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை எளிதாக்கவும் அவ்வப்போது சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குறுஞ்செய்தி அனுப்பவுவதில் பிரைவசியை (Privacy) அதிகரிக்கும் வகையில் முக்கிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம் என்னது குறித்து விரிவாக பார்க்கலாம்.

படித்ததும் மறைந்துவிடும் குறுஞ்செய்திகள் – வாட்ஸ்அப் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செய்லியில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பயனர்களின் பிரைவசியை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறுஞ்செய்திகள் படித்ததும் மறைந்துவிடும் Disappear அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ எஃப்33 சீரீஸ்.. முழு விவரம் இதோ!

ஏற்கனவே பயனர்கள் எவ்வளவு நேரத்திற்கு பிறகு தங்களது குறுஞ்செய்திகள் மறைய வேண்டும் என்ற அம்சம் உள்ளது. அதாவது ஒரு நாள், 7 நாட்கள், 90 நாட்கள் என குறுஞ்செய்தியை பெறுநர் படித்ததும் மறைந்துவிடும் அம்சம் உள்ளது. தற்போது அதேபோல ஒரு அம்சத்தை தான் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய அம்சம் எப்படி செயல்படும்

தற்போது வாட்ஸ்அப்பில் அமலில் உள்ள அம்சத்தில் குறைந்தது ஒரு நாள் வரையாவது அந்த குறுஞ்செய்திகள் அப்படியே இருக்கும். இந்த நிலையில், பெறுநர் குறுஞ்செய்தியை படித்த உடனே அவை மறையும் அம்சத்தை தான் வாட்ஸ்அப் தற்போது சோதனை செய்து வருகிறது. இது பயனர்கள் குறுஞ்செய்திகள் மறைய காத்திருக்க நேரம் வழங்காமல் அதனை பார்த்த உடனே மறைந்துவிடும் வசதியை வழங்குகிறது.

இதையும் படிங்க : தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம்.. ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்நாப்சாட் (Snapchat) உள்ளிட்ட செயலிகளில் இருப்பதை போல குறுஞ்செய்தியை படித்ததுமே அவை மறைந்துவிடும் அம்சத்தை தான் தற்போது வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக வாபீட்டா (WABeta) தெரிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..