இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
Lava Yuva Smart 2 Smartphone | லாவா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனான லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

லாவா யுவா ஸ்மார்ட் 2
இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் லாவாவும் (Lava) ஒன்று. இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், சாமானிய மக்களுக்கான சிறந்த தேர்வாக லாவா உள்ளது. அந்த வகையில், லாவா தற்போது பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போனை (Lava Yuva Smart 2 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஆக இந்த லாவா யுவா ஸ்மார்ட் 2 விளங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இதுவரை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படாத வகையில் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிரிஸ்டல் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் கோல்டு ஆகிட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!
லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன?
Lava Yuva Smart 2 with 6.75″ 90Hz display, 5000mAh battery launched for Rs. 6,099 https://t.co/83QhDiCJPk pic.twitter.com/3lwaPh3UkM
— FoneArena Mobile (@FoneArena) September 4, 2025
இந்த லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன் UNISOC 9863a அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி-க்கு சப்போர்ட் செய்யாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD + IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Samsung A17 5G : ஏஐ முதல் மூன்று கேமரா செட் அப் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது சாம்சங் ஏ17 5ஜி!
இந்த லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் ஏஐ டூயல் ரியல் கேமரா செட் அப்பை கொண்டுள்ளது. இதில் இரவு, HDR, Time Lapse உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் 5 மெகா பிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தைய அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,099-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.