WhatsApp : வாட்ஸ்அப்பில் இருக்கும் அசத்தல் அம்சங்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Special Features In WhatsApp | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், பலருக்கும் தெரியாத வேலைகளை மிகவும் எளிதாக்க கூடிய சில அம்சங்கள் உள்ளன. அவை என்ன என்ன அம்சங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப்பில் இருக்கும் அசத்தல் அம்சங்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Feb 2026 23:20 PM

 IST

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரதான செயலியாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp). தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொதுமக்கள் பலர் அதில் இருக்கும் சில அட்டகாசமான அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளாமலே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அட்டகாசமான அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

 செயற்கை நுண்ணறிவு

முன்பெல்லாம் ஏதேனும் தகவல் தேவையென்றால் கூகுள் உள்ளிட்ட செயலிகளில் தேட வேண்டிய அவசியம் இல்லை. காரணம், வாட்ஸ்அப் செயலியில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உள்ளது. இந்த நிலையில், கூகுளில் தேடுவதையெல்லாம் தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சத்திலேயே செய்துக்கொள்ள முடியும்.

ஒரே போனில் இரண்டு எண்கள்

முன்பெல்லாம் இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் நபர்கள், இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த பேரலல் ஸ்பேஸ் (Parallel Space) போன்ற செயலிகளை தேடுவர். ஆனால், இனி அந்த கவலை இல்லை. ஒரே வாட்ஸ்அப் செயலியில் ஃபேஸ்புக் போலவே இரண்டு கணக்குகளை லாக் இன் செய்து தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.

இதையும் படிங்க : இயர் பட்சில் இப்படி ஒரு சிக்கலா?.. நொடியில் எல்லாமே முடிந்துவிடும்.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

எச்டி புகைப்படங்கள்

முன்பெல்லாம் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பினால் அது தரம் குறைவாக இருக்கும் என புலம்புவர். ஆனால், தற்போது அந்த தலைவலி எல்லாம் கிடையாது. காரணம், தற்போது வாட்ஸ்அப்பில் எச்டி (HD – High Definition) அம்சம் உள்ளது. அதனை பயன்படுத்தி புகைப்படங்களின் தரம் குறையாமல் அவற்றை அனுப்ப முடியும்.

ரகசிய குரல் பதிவுகள்

முன்பு புகைப்படங்களுக்கு மட்டும் இருந்த ஒருமுறை பார்க்கும் (View Once) வசதி தற்போது குரல் பதிவுகளுக்கும் வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் ஒருவருக்கு குரல் பதிவை அனுப்பும் நிலையில், நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அந்த நபர் ஒரே ஒருமுறை தான் உங்கள் பதிவை கேட்க முடியும்.

ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?
இனி ரூ.25,000 முதல் உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் - எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு
மது இல்லாத திருமணங்களுக்கு ரூ.51,000 பரிசு - உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..