இன்ஸ்டாவை கலக்கும் Retro Saree AI டிரெண்ட்.. பாதுகாப்பானதா?.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

Gemini Retro Saree Trend | தற்போது இன்ஸ்டாகிராம் முழுவதும் பலரும் தங்களது புகைப்படங்களை ஜெமினி ஏஐ மூலம் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஏஐ மூலம் அவ்வாறு புகைப்படங்களை எடிட் செய்வது தனிப்பட்ட உரிமைகளுக்கு ஆபத்தானது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இன்ஸ்டாவை கலக்கும் Retro Saree AI டிரெண்ட்.. பாதுகாப்பானதா?.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

ரெட்ரோ சாரி ஏஐ புகைப்படங்கள்

Updated On: 

16 Sep 2025 14:05 PM

 IST

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அதனை பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிக சுலபமாக எடிட் செய்யலாம் என்ற நிலை உள்ள நிலையில், பலரும் தங்களது புகைப்படங்களை தங்களுக்கு பிடித்த வகையில் எடிட் செய்கின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது இணையத்தில் ஒவ்வொரு அம்சம் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்ரோ சாரி (Retro Saree) அம்சம் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானகாதா என்பது குறித்து பார்க்கலாம்.

இணையத்தில் அவ்வப்போது வைரலாகும் டிரெண்டுகள்

செயற்கை நுண்ணறிவு அம்சம் மக்கள் மத்தியில் பிரிபலமாக தொடங்கிய காலக்கட்டத்தில் ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli) அம்சம் டிரெண்ட் ஆனது. ஜப்பானிய கலைஞர் பல நாட்கள் கடினப்பட்டு உயிர் கொடுத்த இந்த ஸ்டுடியோ கிப்லி ஓவியங்களை சாட்ஜிபிடி ஒரு சில நொடுகளில் புகைப்படங்களாக மாற்றிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நானோ பனான (Nano Banana) உள்ளிட்ட அம்சம் மக்கள் மத்தியில் வைரலாகின. அந்த வகையில் தற்போது ரெட்ரோ சாரி (Retro Saree) ஏஐ அம்சம் பொதுமக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை எடிட் செய்து வருகின்றனர். ஆனால், இந்த அம்சங்கள் பாதுகாப்பு அற்றவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க : 2050ல் கண்டென்ட் கிரியேட்டர்களின் தோற்றம் எப்படி இருக்கும்? – ஏஐ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

ஏஐ டிரெண்டுகள் ஆபத்தானவை – எச்சரிக்கும் வல்லுநர்கள்

பொதுமக்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் இருக்கும் இந்த டிரெண்டுகளில் தங்களது புகைப்படங்களை எடிட் செய்து வரும் நிலையில், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் இவ்வாறு ஜெமினி அல்லது சாட் ஜிபிடி உதவியுடன் எடிட் செய்யப்படும் புகைப்படங்களில் வாட்டர் மார்க் இருக்கும் என்றும் அதனை சாதாரன பயனர்களால் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. சில கருவிகளை கொண்டு மட்டுமே அந்த வாட்டர் மார்க்குகளை பார்க்க முடியும் என்றும், இதன் காரணமாக அது வேறு சில விவகாரங்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது பலரும் ஏதேனும் ஒரு சூழலை கூறி ஏஐ இடம் அது தொடர்பான புகைப்படங்களை கேட்கின்றனர். அவ்வாறு கேட்கப்படும் புகைப்படங்கள் மனிதர்கள் தொடர்பானதாக இருந்தால் ஏஐ-க்கு ஒரு முகம் தேவைப்படும். எனவே பொதுமக்கள் இவ்வாறு எடிட் செய்யும் புகைப்படங்களை ஏஐ தனது செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களுக்கான முகங்களாக பயன்படுத்திக்கொள்ளும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க : உலகின் முதல் AI அமைச்சர்.. ஊழலை ஒழிக்க அல்பேனியா அரசு அதிரடி நடவடிக்கை!

ஏஐ புகைப்படங்களின் மறு பக்கம் – பெண் வெளியிட்ட வீடியோ

இந்த ஜெமினி ரெட்ரோ சாரி டிரெண்ட் அம்சத்தை பயன்படுத்தி தனது புகைப்படத்தை எடிட் செய்த பெண் ஒருவர் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அந்த பெண் தனது புகைப்படத்தை எடிட் செய்வதற்காக முழு கை உடன் கூடிய சுடிதார் அணிந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால், ஜெமினி ஏஐ உருவாக்கி கொடுத்த புகைப்படத்தில் அந்த பெண்ணின் கையில் இருந்த மச்சம் வந்துள்ளது. எடிட் செய்ய பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தில் இல்லாத மச்சம் ஜெமினி ஏஐ-க்கு எப்படி தெரிந்தது என்பது தனக்கு மிகுந்த குழப்பத்தை அளிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். எனவே தனிப்பட்ட மற்றும் அந்தரங்க புகைப்படங்களை ஏஐ மூலம் எடிட் செய்வதற்கு முன்னதாக நன்கு யோசிக்க வேண்டும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.