இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!

Instagram Removed End-To-End Encryption Feature | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் பாதுகாப்பு அம்சமாக End-To-End Encryption நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி பயனர்களின் சாட்கள் பாதுகாப்பானதாக இருக்காது. இந்த நிலையில், பாதுகாப்பு அம்சத்தை மெட்டா நீக்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 May 2026 20:55 PM

 IST

உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக மெட்டாவின் (Meta) இன்ஸ்டாகிராம் (Instagram) செயலொ உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், பலருக்கும் அது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான பயனர்களுக்கு இது மிகவும் முக்கிய செயலியாக உள்ள நிலையில், பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் முக்கிய மாற்றம் ஒன்று  அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று முதல் இன்ஸ்டாகிராமில் வந்த முக்கிய மாற்றம்

இன்ஸ்டாகிராம் செயலியில் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இத்தகைய அம்சங்கள் உள்ளதன் காரணமாக அதன் பயன்பாடும் பொதுமக்கள் மத்தியில் மிக அதிகமாக உள்ளது. சிலரால் இன்ஸ்டாகிராம் செயலி இல்லாமல் இயங்கவே முடியாது. இவ்வாறு பலரது வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கும் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முக்கிய அம்சம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

இனி இன்ஸ்டாகிராமில் End-To-End Encryption கிடையாது?

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் End-To-End Encryption அம்சம் இருந்தது. அதாவது, பயனர்களின் சாட்களை வேறு யாரும் படிக்க முடியாது என்று மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியாக இந்த அம்சம் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், இதில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. அதாவது, இனி இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்கு End-To-End Encryption பாதுகாப்பு அம்சம் வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அதிக நேரம் லேப்டாப், ஸ்மார்ட்போன் பார்க்கும் நபரா நீங்கள்?.. Yellow Light Screen பயன்படுத்துங்கள்!

இது தொடர்பாக மார்ச் மாதம் கூறியிருந்த மெட்டா, End-To-End Encryption அம்சம் நீக்கம் செய்யப்படுவதால் உங்களது சாட் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றால், அந்த சாட்களை பதிவிறக்கம் செய்துக்கொண்டு சாட்களை டெலிட் செய்துவிடலாம் என்று மெட்டா கூறியிருந்தது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய அம்சம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் சாட்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்களால் சுலபமாக அனுகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி