அபாயத்தில் கூகுள் குரோம் பயனர்கள் – மத்திய அரசு எச்சரிக்கை
Google Chrome : கூகுள் குரோம் புரௌசரை பயன்படுத்தும் பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய கணினி அவசர எதிர்வினை அணியான CERT-In கடும் எச்சரிக்கை அறிவித்துள்ளது. விண்டோஸ், மேக் ஓஎஸ், லினக்ஸ் ஆகிய அனைத்திற்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
கூகுள் குரோம் (Google Chrome)புரௌசரை பயன்படுத்தும் பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய கணினி அவசர எதிர்வினை அணியான CERT-In கடும் எச்சரிக்கை அறிவித்துள்ளது. விண்டோஸ் (Windows), மேக் ஓஎஸ், லினக்ஸ் ஆகிய அனைத்திற்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவித்துள்ளது. காரணம், கூகுள் குரோம் புரௌசரில், அதிக ஆபத்து தரும் இரண்டு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து வெளியிடப்பட்டுள்ளது. செர்ட் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி கூகுள் கிரோமில் இரு முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது, CVE-2025-13223 மற்றும் CVE-2025-13224 இவை இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குறைபாடுகளை பயன்படுத்தி, ஹேக்கர்கள் ரிமோட் முறையில் உங்கள் கணினியை தாக்கும் அபாயம் உள்ளாக தெரியவந்துள்ளது. இந்த குறைபாடு குரோமினுடைய வி8 ஜாவா ஸ்கிரிப்ட் என்ஜினில் ( V8 JavaScript Engine)ல் ஏற்படும் டைப் கன்ஃபியூசன் எரர் காரணமாக உருவாகிறது. இதன் காரணமாக புரௌசர் தவரான மெமரி இடங்களை அணுகும் என்பதால், ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் திங்கிழைக்கும் கோட்களை பதிவேற்றலாம். ஒருகுறிப்பிட்ட வெப் பேஜ் திறந்தாலே நம் கம்ப்யூட்டர் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.
இதையும் படிக்க : ஆடியோ, வீடியோ கால் உடன் எக்ஸ் தளத்தில் அறிமுகமானது சாட் அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?
Google தெரிவித்த தகவலின்படி, CVE-2025-13223 குறைபாட்டின் காரணமாக ஹேக்கர்கள் ஏற்கனவே பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் அபாயம் இன்னும் தீவிரமானதாக மாறியுள்ளது. பாதிப்பு உள்ள கிரோம் பதிப்புகள்,
-
Windows – 142.0.7444.175/.176 க்கு முந்தையவை
-
macOS – 142.0.7444.176 க்கு முந்தையவை
-
Linux – 142.0.7444.175 க்கு முந்தையவை
புதிய பாதுகாப்பு அப்டேட்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பயனர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?
CERT-In பயனர்களை உடனடியாக குரோமை அப்டேட் செய்ய வலியுறுத்துகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் குரோமை அப்டேட் செய்து நம் கம்ப்யூட்டரை பாதிக்கலாம்.
இதையும் படிக்க : சூம் செயலி பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை.. மத்திய அரசு முக்கிய தகவல்!
- அப்டேட் செய்ய, கூகுள் குரோம் சென்று செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
- அதில், Help என்பதைத் தேர்ந்தெடுத்து About Google Chrome என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உடனடியாக உங்கள் குரோம் அப்டேட்டாகும்.
- பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட்டாகும்.
பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் போது, உடனடி அப்டேட் மட்டுமே பாதுகாப்பான தீர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக கூகுள் குரோமை அப்டேட் செய்வது நமக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.