New Year 2026 : 2026 புத்தாண்டுக்கு உங்களது அன்புக்குரியவர்களுக்கு இப்ப்டி வாழ்த்து கூறுங்கள்!
Happy New Year 2026 | இன்று 2025-ன் கடைசி நாளாக உள்ள நிலையில், நாளை புத்தாண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், உங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு இப்படி வாழ்த்து கூறி அவர்களின் புத்தாண்டு சிறப்பானதாக தொடங்க வழிவகை செய்யுங்கள்.

புத்தாண்டு 2026
2025 ஆம் ஆண்டு இன்றுடன் (டிசம்பட் 31, 2025) உடன் முடிவடைய உள்ளது. நாளை (ஜனவரி 1, 2026) புத்தாண்டு (New Year) தொடங்க உள்ளது. புத்தாண்டு புதிய ஆண்டை மட்டுமன்றி, புதிய நம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்பையும் வழக்குகிறது. இதன் காரணமாக தான் பலரும் புத்தாண்டில் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை செய்ய வேண்டும் என்றோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு தவறான பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றோ நினைப்பர். இவ்வாறு பலரும் தங்களது வாழ்க்கைக்கு ஏற்ப புதிய கொள்கைகளை உருவாக்குவர். இவ்வாறு புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுக்கும் மிக முக்கிய பண்டிகையாக உள்ளது.
இந்த நிலையில், இந்த 2026 புத்தாண்டு தினத்துக்கு உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இப்படி வாழ்த்து கூறுங்கள். அந்த வகையில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் வழங்கும் வகையிலான புத்தாண்டு வாழ்த்துக்களின் தொகுப்பு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் உங்களது அன்புக்குரியவர்களுக்கு இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்களை (New Year Wishes) கூறுங்கள்.
2026 ஆம் ஆண்டுக்கு இப்படி புத்தாண்டு வாழ்த்து கூறுங்கள்
புத்தாண்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை இருக்கும். அதற்கு ஏற்ப அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது மேலும் சிறப்பானதாக இருக்கும்.
பொதுவான புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி மற்றும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன் (Happy New Year! Wishing You joy and success).
- சிறப்பான 2026 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துக்கள் (Cheers to a bright 2026).
- புதிய ஆண்டு, புதிய தொடக்கங்கள் (New Year, New Beginnings).
- 2026 ஆண்டு இதுவரை இல்லாத அளவு உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும் (May 2026 be your best year yet).
- இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் நலமுடன் இருக்க விரும்புகிறேன் (Wishing you happiness all year long).
இதையும் படிங்க : 2026ல் செல்போன்கள் விலை தாறுமாறா உயர வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
வெற்றிக்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இந்த 2026 ஆம் ஆண்டு உங்களது கனவுகளை அடைவதற்கான தைரியத்தை கொடுக்கட்டும் (May 2026 brings courage to chase your dreams).
- இந்த ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியமும், வெற்றியும் வர விரும்புகிறேன் (Wishing You Strength and Success in the year).
- இந்த 2026 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும் (May your path in 2026 be filled with light).
- புதிய ஆண்டு, புதிய கனவுகள், புதிய சாதனைகள் (New Year, New Dreams, New Achievements)
- இந்த ஆண்டு உங்களது கனவுகள் நனவாகட்டும் (May this year turn your goals into reality).
நகைச்சுவையான புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் திங்கள் கிழமைகளை கடந்து வர விரும்புகிறேன் (Cheers to year of surviving Mondays).
- 2026-ல் உங்களது வைஃபை உறுதியானதாகவும், உங்களது அதைவிட உறுதியானதாகவும் இருக்க விரும்புகிறேன் (May your Wi-Fi be strong and your coffee stronger in 2026).
- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கொள்கைகளில் உறுதியாக உள்ளதை போல பாவனை செய்வோம் (Happy New Year! Let’s pretend we’ll stick to resolution).
- 365 நாட்களுக்கான மகிழ்ச்சியும், சங்கடமான நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்கட்டும் (Wishing you 365 days of laughter and no awkward moment).
- உங்கள் செல்ஃபி புகைப்படங்களை போலவே 2026 ஆம் ஆண்டு மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் (May your 2026 be as fabulous as your selfies).
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஏஐ அம்சங்கள்!
அன்புக்குரியவர்களுக்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அன்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துக்கள் (Wishing us a year full of love and laughter).
- இனிய 2026, என் காதலே, நீங்கள் எனது ஒவ்வொரு ஆண்டையும் மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறீர்கள் (Happy 2026, My Love. You make every year better).
- நம்முடைய காதல் ஒவ்வொரு புத்தாண்டிலும் மேலும் உறுதியானதாக மாறட்டும் (May Our Love Grow Stronger with every new year).
- 2026 ஆம் ஆண்டில் நாம் உருவாக்க போகும் நினைவுகள் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் (Cheers to us the memories we will make in 2026).
- நான் புத்தாண்டை கொண்டாடுவதற்கான மிக பிடித்த காரணம் நீங்கள் தான் (You are my favourite reason to celebrate every year).