Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மொபைல் சர்வீசில் திருடப்படும் தகவல்கள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Mobile Service Safety Tips | சமீப காலமாக சர்வீசுக்கு கொடுக்கும் ஸ்மார்ட்போன்களில் இருந்து தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சர்வீசுக்கு கொடுக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் மற்றும் தரவுகள் பாதுகாப்பாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jan 2026 13:28 PM IST
ஸ்மார்ட்போனில் ஏதேனும் சிக்கல் அல்லது கோளாறும் ஏற்பட்டால் அதனை சர்வீஸ் செண்டர்களில் கொடுத்து சரிசெய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. நிறுவனங்களின் ஷோரூம்களில் கொடுத்து சரிசெய்தால் அதற்கு அதிக செலவாகும் என்பதால் பலரும் இந்த முறையை கையாளுகின்றனர். 

1 / 5
ஆனால், இவ்வாறு சர்வீஸ் செண்டர்களில் மொபைல்போனை சரிசெய்ய கொடுப்பதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அதாவது சர்வீஸ் செண்டர்களில் இருக்கும் நபர்கள் அந்த மொபைல்போனில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள், ரகசிய தகவல்கள், ஜிமெயில், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை திருடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. 

2 / 5
நீங்கள் உங்கள் மொபைல்போனில் உள்ள அனைத்து தரவுகள் மற்றும் தகவல்களை பேக் அப் எடுத்து வைக்காமல் கொடுத்துவிட்டால் இந்த சிக்கல்கள் நடைபெறும். ஆனால், சிலர் நேரமின்மை காரணமாக மொபைல்போனை அப்படியே கொடுத்துவிடுகின்றனர். இதற்கு தீர்வு காண சில வழிகள் உள்ளன. 

3 / 5
தற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் Repair அல்லது Maintenance மோடுகள் உள்ளன.  இந்த அம்சங்களை பயன்படுத்தும் பட்சத்தில் மொபைல்போன் செயல்பாட்டில் இருக்கும். ஆனால், அதில் இருக்கும் தரவுகள் மற்றும் தகவல்களை பயன்படுத்த முடியாது. மொபைல்போனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றால் பாஸ்வேர்டு அல்லது பின் உள்ளிட்டு இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும். 

4 / 5
இந்த இரண்டு அப்ஷன்களுமே இல்லாதவர்களுக்கும் ஒரு ஆப்ஷன் உள்ளது. அது தான் கெஸ்ட் மோடு. இதுவும் மேற்குறிப்பிட்ட அம்சத்தை போலவே தான் செயல்படும். இந்த மோடை ஆன் செய்த பிறகு அதில் எந்த வித தரவுகளும், தகவல்களும் இருக்காது. போன் சரிசெய்யப்பட்ட பிறகு நீங்கள் பாஸ்வேர்டு அல்லது பின் உள்ளிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரலாம்.

5 / 5