கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?
Service Air Conditioner By Yourself | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏசியை வீட்டில் இருந்தே எப்படி சுத்தம் செய்து சர்வீஸ் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
முன்பெல்லாம் ஏசி (AC – Air Conditioner) என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால், மாறி வரும் காலநிலை, வெப்பநிலை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக ஏசி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக கோடைக்காலத்தில் ஏசியை பயன்படுத்தமால் யாரும் இருக்கமாட்டார்கல். இவ்வாறு கோடையில் ஏசி அதிக பயன்பாட்டை எதிர்க்கொள்ளும் அதில் சில சிக்கல்களும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த நிலையில், கோடைக்காலத்தில் நாமே ஏசியை சர்வீஸ் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏசியை நாமே சர்வீஸ் செய்துக்கொள்ளலாம் – எப்படி தெரியுமா?
ஏசியை சிலமுறைகளை பின்பற்றி நாமே சர்வீஸ் செய்ய முடியும். அது என்ன என்ன முறைகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காற்று வடிகட்டி சுத்தம்
ஏசியில் உள்ள காற்று வடிகட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே அதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது ஏசியின் முன்பக்கம் உள்ள பேனலை மெதுவாக வெளியே தூக்கினால் வலைபோன்ற பில்டர்கள் இருக்கும். அந்த பில்டர்களை வெளியே எடுத்து அதில் படித்திருக்கும் தூசியை வேகமாக வெளியேறும் வாட்டர் பைப் மூலம் கழுவி சுத்தம் செய்யலாம். இதுவே அதிகமாக அழுக்கு மற்றும் தூசி சேர்ந்திருந்தால் திரவங்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
இதையும் படிங்க : நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!
குளிரூட்டும் சுருள் சுத்தம்
பில்டர்களை எடுத்த பிறகு மெல்லிய அலுமினிய வரிசைகளில் இருப்பவை தான் குளிரூட்டும் சுருள்கள். அவை மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் மென்மையாக சுத்தம் செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. அதாவது மெல்லிய பிரஷ்களை கொண்டு அதில் படிந்திருக்கும் தூசிகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.