ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்.. வாட்ஸ்அப்பில் செய்யும் இந்த ஒரு மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்!

Fix Smartphone Storage With WhatsApp Setting | பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கலாக் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் செட்டிங்கில் மேற்கொள்ளும் ஒரு சிறிய மாற்றம் ஸ்டோரேஜ் சிக்கலை தீர்க்க பயனுள்ளதாக இருக்கும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்.. வாட்ஸ்அப்பில் செய்யும் இந்த ஒரு மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Nov 2025 21:02 PM

 IST

ஸ்மார்ட்போன்களில் (Smartphone) எவ்வளவு சிறப்பு அம்சங்கள் உள்ளதோ அதே போல சில சிக்கல்களும் உள்ளன. அத்தகைய சிக்கல்களில் ஒன்றுதான் ஸ்டோரேஜ் சிக்கல் (Storage Issue). ஸ்மார்ட்போன் சீராக செயல்பட வேண்டும் என்றால் அதற்கு ஸ்டோரேஜ் முக்கியமான அம்சமாக உள்ளது. ஒருவேளை ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால், வேறு எந்த செயலிகளையும் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே தான் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜை மேனேஜ் செய்வது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் (WhatsApp) செய்யும் ஒரு சிறிய மாற்றத்தின் மூலம் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கலை தீர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொல்லை கொடுக்கும் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்

ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு அளவிலான ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டு இருக்கும். அந்த ஸ்மார்ட்போன் எந்த அளவு ஸ்டோரேஜ் கொண்டுள்ளதோ அதனை தாண்டி, ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஸ்மார்ட்போனையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக செயலிகள் மற்றும் ஃபைல்களை டெலிட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் மேற்கொள்ளப்படும் ஒரு சிறிய மாற்றத்தின் மூலம் உங்களால் இந்த சிக்கலை தீர்க்க முடியும்.

இதையும் படிங்க : 2025 நவம்பரில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. உடனே செக் பண்ணுங்கள்

வாட்ஸ்அப்பில் இத மட்டும் பண்ணா போதும்

தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் பல குழுக்களும் இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஏராளமான புகைப்படங்கள் கேலரியை வந்து சேரும். இதன் விலைவாக ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விரைவில் தீர்ந்துவிடும். இத்தகைய சூழல்களில் கேலரியில் இருக்கும் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இது பலருக்கும் சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையை தவிர்க்க தான் வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதுதான் வாட்ஸ்அப் மீடியா ஆட்டோ சேவ் (WhatsApp Media Auto Save) அம்சத்தை ஆஃப் செய்வது.

இதையும் படிங்க : New Aadhaar App: மத்திய அரசு பலே திட்டம்! அறிமுகமான புதிய ஆதார் ஆப்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் ஆட்டோ சேவ் அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு அதில் இருக்கும் செட்டிங்க்ஸ் (Settings) அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  4. அதில் இருக்கும் சாட் (Chat) அம்சத்திற்குள் செல்ல வேண்டும்.
  5. பிறகு அதில் இருக்கும் மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் மீடியா கேலரிக்கு வரும் தேவையற்ற புகைப்படங்களை உங்களால் தடுக்க முடியும். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்புவது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.