2025 நவம்பரில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. உடனே செக் பண்ணுங்கள்!
Smartphones Under 20,000 Rupees | பெரும்பாலான நபர்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என நினைப்பர். ஆனால், குறைந்த விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறப்பு அம்சங்கள் பெரிதாக இருக்காது என பலரும் நினைக்கின்றனர். இந்த நிலையில், அசத்தலான அம்சங்களுடன் ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
தற்போதைய சூழலில் ஸ்மார்ட்போன் (Smartphone) பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. சிலருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த விருப்பமில்லை என்றாலும், சமூகத்துடன் மற்றும் தனது உறவினர்களுடன் தொடர்பில் இருக்க அவர்களுக்கு ஸ்மார்ட்போன் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போதுள்ள சூழலில் ஸ்மார்ட்போன்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், அவற்றை வாங்க பொதுமக்கள் யோசிக்கின்றனர். இந்த நிலையில், 2025, நவம்பரில் ரூ.20,000-க்கு குறைவாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
iQOO Z10, போக்கோ எஸ்6 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களாக உள்ளன.
iQOO Z10R
இந்தியாவில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன ஆக iQOO Z10R உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7400 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,700 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஒரு நாள் முழுவதும் நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Google Maps : கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அட்டகாசமான அம்சங்கள்.. என்ன என்ன?
போக்கோ எக்ஸ் 6 மற்றும் எக்ஸ் 7
நீங்கள் உங்கள் ரூ.20,000 பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.1,000 செலுத்தும் பட்சத்தில் உங்களால் இந்த போக்கொ எக்ஸ் 6 ஸ்மார்ட்போனை (Poco X6 Smartphone) வாங்க முடியும். காரணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.26,999 ஆகும். ஆனால், தற்போது பிளிப்கார்டில் (Flipkart) தள்ளுபடியுடன் வெறும் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4nm மீடியாடெக் டைமன்சிட்டி 8,300 அல்ட்ரா பிராசசர் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வரை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : பழைய வீடியோக்களை HD-ல் பார்க்கலாம்.. யூடியூபில் வரும் புதிய அம்சம்!
உங்களுக்கு ரூ.20,000-க்கு மேல் பட்ஜெட் தாண்ட கூடாது என்றால் நீங்கள் போக்கோ எக்ஸ் 7 ஸ்மார்ட்போனை (Poco X7 Smartphone) தேர்வு செய்யலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், சிறந்த கேமரா மற்றும் டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது.
நத்திங் போன் 3ஏ
இந்த நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் (Nothing Phone 3a Smartphone) சிறந்த டிஸ்பிளே அம்சம் மற்றும் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஒரு நாள் முழுவதும் நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் (Amazon) ரூ.22,981-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வங்கி சலுகை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.20,000-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
பெடரல் பேங்க் மாத தவணை சலுகை மூலம் நீங்கள் ரூ.3,000 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு சலுகை பெறலாம். இதேபோல ஒன்பிளஸ் நோர்டு சிஇ 4 மற்றும் மோட்டோ ஜி96 ஆகிய ஸ்மார்ட்போன்களையும் நீங்கள் உங்கள் தேர்வி எழுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரூ.20,000-க்குள் கிடைக்கும் பட்கெட் ஸ்மார்ட்போன்களாக உள்ளன.