தண்ணீரை உறிஞ்சும் ஏஐ.. சாட்ஜிபிடியில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் இருக்கும் ஆபத்து!

ChatGPT Using Huge Amount Of Water | தற்போதைய சூழலில் பெரும்பாலான நபர்கள் சின்ன சின்ன தேவைகளுக்கும் சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது சர்வர்களை குளிர்விக்க ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறதாம். இதன் காரணமாக சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தண்ணீரை உறிஞ்சும் ஏஐ.. சாட்ஜிபிடியில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் இருக்கும் ஆபத்து!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Mar 2026 22:05 PM

 IST

தொழில்நுட்பத்தின் (Technology) உச்சமாக உள்ள செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் தற்போது அனைவரும் பயன்படுத்தக்கூடிய அம்சமாக மாறிவிட்டது. பலரும் தங்களது சந்தேகங்களுக்கு விடை கேட்பது முதல் புகைப்படங்களை எடிட் செய்வது, வீடியோக்களை உருவாக்குவது என செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது பலருக்கும் ஒரு பொழுதுபோக்காக அல்லது எளிதில் வேலைகளை செய்ய கூடிய ஒரு அம்சமாக தோன்றினாலும் அதன் பின்னால் மிகப்பெரிய சுற்றுசூழல் ஆபத்து உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் செயற்கை நுண்ணறிவு

நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், நாம் அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப் ஆகியவையே தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தினால் சூடாக மாறிவிடும். தனிப்பட்ட தேவைகளுக்கே இப்படி என்றால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு சர்வர்கள் எப்படி இருக்கும். அவை நினைத்து கூட பார்க்க முடியாத அளவு வெப்பமானதாக இருக்கும். அவற்றை அப்படியே விடுவது சர்வர்களை பாதிக்கும். இதன் காரணமாக தான் கூலிங் டவர்கள் அமைக்கப்பட்டு சூடான இயந்திரங்களின் மேல் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!

கூகுள் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

இவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆணி வேராக இருக்கும் சர்வர்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஏராளமான நன்னீர் தேவைப்படுகிறது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சுற்று சூழல் அறிக்கை பகீர் தகவலை வெளியிட்டது. அதாவது 2023 ஆம் ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் டேட்டா சென்டர்களை குளிர்விக்க சுமார் 610 கோடி கேலன் நன்னீர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டை விட அது 17 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : குரோமா கோடைக்கால சேல்.. டிசி, ஏசி-க்கு அசத்தல் தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!

நன்னீர் பயன்படுத்தப்படுவதற்கு பின்னால் இருக்கும் காரணம்?

சர்வர்களை குளிர்விக்க நன்னீர் பயன்படுத்தப்படுவது குறித்து தெரிந்துக்கொண்டதும் உங்களுக்குள் ஏன் நன்னீர் என கேள்வி எழலாம். அதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. அதாவது மறு சுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிமாக இருக்கும். இதன் காரணமாக பல கோடிகள் மதிப்பிலான சர்வர்கள் உப்பு படிந்து சேதமாகிவிடும். அதனை தடுக்கவே இந்த நன்னீர் பயன்படுத்தும்  முறை உள்ளது.

Follow Us
Related Stories
ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.. இன்று முதல் அதிரடி நடவடிக்கை!
இனி வாட்ஸ்அப்பில் புரமோடட் சேனல்கள், ஸ்டேட்டஸில் விளம்பரங்கள் தோன்றும்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!
இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் தற்கொலை குறித்து தேடினால் பெற்றோருக்கு எச்சரிக்கை வரும்.. மெட்டா அறிமுகம் செய்யும் முக்கிய அம்சம்!
இனி சிம் அக்டிவாக இல்லை என்றால் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய நடவடிக்கை!
‘வருவாயை நியாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்’ – சமூக ஊடக தளங்களுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை
இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ