சர்வீஸ் செய்த பிறகும் ஏசியில் கூலிங் கிடைக்கலையா? இந்த பிரச்னையாக இருக்கலாம் – எச்சரிக்கும் நிபுணர்கள்
AC Service Tips : ஏசியை சர்வீஸ் செய்த பிறகு குளிரச்சி குறைவாக கிடைத்தால் அது கூலிங் காயில் பிரச்னையாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் செலவுகள் குறையும். கூலிங் காயில் பிரச்னைக்கான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஏர் கண்டிஷனர் (AC) சர்வீஸ் செய்த பிறகும் சரியாக குளிர்ச்சி தரவில்லை என்றால், அதன் பின்னால் கூலிங் காயில் பிரச்னை இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக மக்கள் ஃபில்டர் சுத்தம் செய்தால் அல்லது gas நிரப்பினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஏசி முழுமையாக குளுமையை வழங்காமல் இருப்பதற்கு அதன் இதயமாக கருதப்படும் கண்டன்சர் காயில் பழுது கூட காரணமாக இருக்கலாம்.
ஏசியில் உள்ள கூலிங் காயிலின் முக்கியத்துவம் என்ன?
ஏசியில் கூலிங் கொடுக்கும் செயல்முறைக்கு ஹீட் எக்ஸ்சேஞ்ச் முறை முக்கிய காரணமாகும். அதனை ஏசியில் உள்ள கூலிங் காயில் தான் செய்கிறது. இந்த கூலிங் காயிலில் தூசி படிந்தாலோ, அல்லது பழுது அல்லது உடைந்தாலோ நமக்கு முழுமையான குளிர்ச்சி கிடைக்காது.
இதையும் படிக்க : வீடும் கூலாக இருக்க வேண்டும்… மின் கட்டணமும் குறைய வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
கூலிங் காயிலின் பழுதுக்கான அறிகுறிகள்
உங்கள் ஏசியில் கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது காயில் பிரச்சனையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. கூலிங் காயில் பிரச்னையாக இருந்தால் ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வராமல் இருக்கும். உள் இயந்திரங்களில் ஐஸ் உருவாகும். தண்ணீர் கசிவு அல்லது துர்நாற்றம் வீசும், மின் கட்டணம் அதிகரிக்கும். காற்று குறைவாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் அது கூலிங் காயில் பிரச்னையாக இருக்கலாம்.
எனவே உங்கள் சர்வீஸ் என்ஜினியரை அழைத்து ஏசியின் கூலிங் காயிலை பரிசோதிக்க சொல்லலாம். பிரச்னை இருந்தால் அதனை உடனடியாக மாற்ற முயற்சிக்கவும். அலட்சியம் செய்தால் நமக்கு பெரிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கூலிங் காயில் பிரச்னையை பல வழிகளில் சரி செ்யலாம். டீப் கிளீனிங் முறையில் தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்யலாம். இதற்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை செலவாகும். கேஸ் வெளியேறும் பிரச்னை இருந்தால் அதற்கு ரூ.2000 முதல் ரூ. 4000 வரை செலவாகலாம். காயிலை பழுது பாக்க ரூ.3000 முதல் 7000 வரை செலவாகலாம். காயிலை மாற்ற ரூ. 6000 முதல் ரூ. 15,000 வரை செலவாகலாம்.
இதையும் படிக்க : வீடுகளில் 8 மணி நேரம் வரை ஏசியை பயன்படுத்துகிறீர்களா? மின் கட்டணம் எவ்வளவு இருக்கும்?
பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, கோடைகாலம் துவங்குவதற்கு முன் சர்வீஸ் செய்ய வேண்டும். மேலும் ஃபில்டரை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. மின் பிரச்னை உள்ள வீடுகளில் ஸ்டெபிளைசர் பயன்படுத்துவது சிறந்தது.
ஏசியின் குளிர்ச்சி குறைவாக இருந்தால், அதை சாதாரண பிரச்னை என்று நினைத்து புறக்கணிக்காமல் உடனடியாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக கூலிங் காயில் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பெரிய செலவையும் சிக்கலையும் தவிர்க்கலாம்.