இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்… தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்

Next Gen Laptop : ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய லேப்டாப்பை பிரான்ஸ் நிறுவனமான அவெனிர் டெலிகாம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனர்ஜைசர் என்ற இந்த லேப்டாப் 3 மாடல்களில் கிடைக்கிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்... தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்

மாதிரி புகைப்படம்

Published: 

26 Sep 2025 21:17 PM

 IST

கல்வி மற்றும் வேலை என அனைத்து விஷயங்களுக்கு லேப்டாப் (Laptop) மிகவும் அவசியமானது. ஆனால் லேப்டாப்பில் இருக்கும் பிரச்னை அதில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்காது. சார்ஜர் இல்லாமல் வெளியே எடுத்து சென்று பயன்படுத்த முடியாது அதே போல,மின்சாரம் தடைபடும்போதும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்.  இந்த நிலையில் 28,000 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனுக்குப் பிறகு, பிரான்ஸ் நிறுவனமான அவெனிர் டெலிகாம் (Avenir Telecom) தற்போது எனர்ஜைசர் (Energizer) பிராண்டின் கீழ் புதிய லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் பயன்படுத்தலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளியான 3 மாடல்கள்

அவெனிர் டெலிகாம் மூன்று வகை லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போன் சார்ஜ் வேகமாக காலியாகுதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

இவற்றில் எனர்ஜிபுக் புரோ அல்ட்ரா (EnergyBook Pro Ultra) மிகப்பெரிய 192Wh பேட்டரி மற்றும் 18 அங்குல திரையுடன் வருகிறது. அவெனிர் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளதன் படி தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது 28 மணி நேரம் வரை செயல்படும். ஸ்டைண்ட்பை மோடில் இது ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.

ஹார்ட்வேர் விவரங்கள்

இந்த புதிய லேப்டாப்பில், AMD Ryzen 5 CPU, 16GB RAM, 512GB SSD ஸ்டோரேஜ், USB-C, USB 3.0, HDMI போர்ட், SD கார்டு ரீடர், ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை உள்ளன. விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,393 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப விலை மட்டுமே எனவும், சிறிய மாடல்களுக்கு பொருந்தும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

94 நாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தும் போன்

அவெனிர் டெலிகாம் இதற்கு முன்பு ஹார்ட் கேஸ் (Hard Case P28K) என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் போனில், 28,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பதால் 122 மணி நேரம் பேசும் வசதி, 94 நாட்கள் ஸ்டாண்ட் பை வசதி, 33 வாட்ஸ் ஸ்பீட் சார்ஜ் வசதி கொடுக்கப்பட்டிருப்பதால் 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும்.  MediaTek MT6789 பிராசசர், 8ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ், 6,78 அங்குல 1080p எல்சிடி திரை, ஆண்ட்ராய்டு 14 போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டது. இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.25,885 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வீட்டில் வைஃபை ஸ்லோவாக இருக்கிறதா? இந்த எளிய மாற்றங்கள் செலவை குறைக்கும்

அவெனிர் டெலிகாம் தனது நீண்ட ஆயுள் பேட்டரி கொண்ட டிவைஸ்கள் மூலம் சந்தையில் மார்க்கெட்டில் தனித்துவமான இடத்தைப் பிடித்து வருகிறது. ஸ்மார்ட்போனுக்குப் பிறகு, தற்போது அறிமுகமான எனர்ஜைசர் லேப்டாப் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.