Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெருகி வரும் சைபர் குற்றம்: சிபிசிஐடி காவல் துறை சார்பில் யுக்தி 2.0 சைபர் ஹேக்கத்தான் போட்டி!

Yukti 2.0 Cyber ​​Hackathon Competition: தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காகவும், கண்டறிவதற்காகவும் சி பி சி ஐ டி போலீசார் சார்பில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

பெருகி வரும் சைபர் குற்றம்: சிபிசிஐடி காவல் துறை சார்பில் யுக்தி 2.0 சைபர் ஹேக்கத்தான் போட்டி!
Yukthi 2 0 Cyber Hackathon Competition
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 22 Dec 2025 10:04 AM IST

தமிழகத்தில் இணைய வழி குற்றங்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்த வகையான குற்றங்களை தடுப்பதற்கும், கண்டறிவதற்கும் இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதன்படி, வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை கலைவதற்கும், டார்க் வெப் வழியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுனர்களின் உதவி இன்றியமையாததாக உள்ளது. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சார்பில் யுக்தி 2.0 ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் வகையில் தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது. புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சைபர் துறை வல்லுநர்களின் உதவியை பெறும் வகையில், குற்ற பிரிவு, குற்றப்புலனாய்வு துறையானது Selfmade Ninja Academy (செல்ஃப் மேட் நிஞ்சா அகாடமி) மற்றும் சவீதா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து 80 வகையான கடினமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தான் போட்டியை அறிவித்து நடத்தியது.

இந்தியா முழுவதும் 2,400 பேர் பதிவு

இந்த ஹேக்கத்தான் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 2,400 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் 13 மற்றும் 14- ஆம் தேதிகளில் முதல் நிலை போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் பங்கேற்று ஹேக்கத்தான் போட்டியில் விளையாடினர். இதில், முதல் 50 அணிகளைச் சேர்ந்த 178 சைபர் வல்லுநர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான இறுதி போட்டிகள் சவீதா பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 19 மற்றும் 20- ஆம் தேதிகளில் நடைபெற்றது.

மேலும் படிக்க: டிக்கெட் இல்லாமல் ராமேஸ்வரம் வந்த 80 வட மாநில பயணிகள் – ரூ.24,000 அபராதம் விதிப்பு

ரூ.75 ஆயிரம் ரொக்க பரிசு அளிப்பு

தற்போது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 35 வகையான சிக்கல்களில் அதிகமானவற்றுக்கு தீர்வு கண்ட 3 அணிகளுக்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. யுக்தி 2.0 ஹேக்கத்தான் போட்டியில் கிடைக்கப்பெற்ற முடிவுகள் தமிழ்நாடு காவல் துறையில் உள்ள சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக அமையும்.

இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில்…

தமிழகத்தில் அண்மைக் காலமாக இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான குற்றங்களில் சிக்கி பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை பணத்தை இழந்து வருகின்றனர். இதில், புது வகையாக டிஜிட்டல் கைது மோசடியும் பெருகி வருகிறது. எனவே, இந்த வகையான மோசடி குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. பிசியோதெரப்பிஸ்ட் கைது..