Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. பிசியோதெரப்பிஸ்ட் கைது..

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த அந்த புகாரில், ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருவதாகவும், பெரம்பூர் அருகே உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் ரூ.4,000 சம்பளத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வேலைக்கு சேர்ந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. பிசியோதெரப்பிஸ்ட் கைது..
கைதான பிசியோதெரபிஸ்ட் கார்த்திக்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Dec 2025 09:15 AM IST

சென்னை, டிசம்பர் 22: சென்னை கொளத்தூரில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பயிற்சி பெற வந்த கல்லூரி மாணவியை பிசியோதெரப்பிஸ்ட் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி துணிச்சலுடன் புகார் அளிக்கவே, நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு, அப்பெண் பயிற்சியில் சேர்ந்து 4 நாட்களில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. மேலும், மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் மருத்துவரே இதுபோன்ற அவலச் சம்பவத்தில் ஈடுபட்டது மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிக்கு நேர்ந்தது என்ன என்பது குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் விடுமுறை – தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

பாதிக்கப்பட்ட மாணவி துணிச்சலுடன் புகார்:

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருவதாகவும், பெரம்பூர் அருகே உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் ரூ.4,000 சம்பளத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வேலைக்கு சேர்ந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனை உரிமையாளரும், பிசியோதெரபிஸ்ட்டுமான கார்த்திகேயன் (27) சில நாட்களுக்குள் தன்னை தொடர்பு கொண்டு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் செல்வோம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து:

அதன்பின், மற்றொரு நோயாளி வீட்டுக்கு செல்ல வேண்டுமெனக் கூறி காரில் அழைத்துச் சென்றார். வழியில் தேநீர் அல்லது காபி குடிப்பதா என கேட்டபோது, தனக்கு பழக்கம் இல்லை என மாணவி கூறியதால், காரில் இருந்த குளிர்பானத்தை அருந்தும்படி, கொடுத்துள்ளார். அதை குடித்த சில நிமிடங்களில் மாணவிக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், அந்த மாணவியை அவர் கொளத்தூரில் உள்ள விடுதிக்கு மாணவியை அழைத்துச்சென்றுள்ளார்.

மயங்கிய மாணவி:

அங்கு, மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டு என்ன நடந்தது என தெரியாமல் போனது. நீண்ட நேரத்திற்கு பிறகு விழித்தபோது, அறையில் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி இருந்துள்ளார். அப்போது, அருகில் கார்த்திக் இல்லை என்று தெரிகிறது. தொடர்ந்து, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை புரிந்த கொண்ட மாணவி, அங்கிருந்து வெளியே வந்து தனது சகோதரிக்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

சகோதரியுடன் போலீஸில் புகார்:

இதையடுத்து அவரது சகோதரி உறவினர்களுடன் உடனடியாக கார்த்திகேயனின் மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். செம்பியம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.

பிசியோதெரபிஸ்ட் கைது:

இந்த புகாரினைப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தியபோது கார்த்திகேயன், ஒரு வேகத்தில் மாணவியிடம் அப்படி நடந்துகொண்டேன். இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன் என்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பெண் வன்கொடுமை, கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: இரவில் அதிக நேரம் படிக்காதே என கூறிய பெற்றோர்.. மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு!

படிப்படியாக உயர்ந்து வந்த கார்த்திக்:

கைதான கார்த்திக் பெற்றோர் இன்றி அனாதை இல்லத்தில் வளர்ந்தவர். பிசியோதெரபியில் படித்து முன்நிலையில் முன்னேறி, பின்னர் சொந்தமாக மருத்துவமனை தொடங்கியிருந்தார். மேலும் பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. படிப்படியாக முன்னேறிய இவர் இவ்வாறு இளம்பெண்ணின் அழகில் சிக்கி குற்றத்தில் ஈடுபட்டது வருத்தகரமானது எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.