மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? இனி உடனடி தீர்வு – என்ன செய்ய வேண்டும்?
Government Scheme Update: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் கலைஞர் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விண்ணப்பித்த ஒரு சிலருக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 18: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Women’s Rights Scheme) என்ற பெயரில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் தமிழக அரசின் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் குழந்தைகளின் கல்வி செலவுகளை சமாளிக்கவும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழக அரசு சார்பில் டிசம்பர் 12, 2025 அன்று நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் கூடுதலாக 19.64 லட்சம் பயனர்களுக்கு கணக்கு அட்டையை வழங்கினார். இதன் மூலம் இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தில் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்தும் ஒரு சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் குறைகளை போக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் வங்கிக் கணக்கை பதிவு செய்தவுடன் அரசு நேரடியாக அந்த பணத்தை பெண்களின் கணக்கில் வரவு வைக்கிறது. இதற்கான விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
இதையும் படிக்க : எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட விஐபி தொகுதிகளின் நிலவரம்!!




மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா?
ஒரு சில பெண்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தும் அவர்கள் கணக்கில் வரவு வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய கியூஆர் கோடு மற்றும் வெப்சைட் மூலம், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர் குடும்பத் தலைவரின் பெயர், மொபைல்போன் நம்பர், ரேசன் அட்டை எண் போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
இதையும் படிக்க : வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இப்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம்!!
இதன் பிறகு அவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை பதிவு செய்தவுடன் உங்கள் குறைகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அது வருவாய் அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர் இந்த மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர் என தெரிய வந்தால், மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த முறையின் மூலம், விடுபட்ட பெண்கள் தங்கள் புகார்களை எளிதாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும். இதனால் அலைச்சல் பெருமளவு குறையும். நம் புகார் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர் என தெரியவந்ததும் நிதி நேரடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.