மதுரையில் உலகத் தரத்திலான சர்வதேச ஹாக்கி மைதானம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
New Hockey Arena : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025 வரை உலக ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.
மதுரை, நவம்பர் 22 : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரைக்கு (Madurai) வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), நவம்பர் 22, 2022 அன்று மாலை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். வருகிற 2025 ஆம் ஆண்டுக்கான 14வது ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை, வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் மற்றும் மதுரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஹாக்கி மைதானம் என இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக நவம்பர் 22, 2025 அன்று மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைக்கான வெற்றிக் கோப்பையையும் அறிவிப்பையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 5, 2025 அன்று வெளியிட்டார்.
அதன் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிக்கான சின்னத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 10, 2025சென்னையில் வெளியிட்டு, உலகக்கோப்பை கோப்பைக்கு தமிழக முழு சுற்றுப்பயணத்தையும் துவக்கி வைத்தார்.
இதையும் படிக்க : இது தமிழ்நாடா, வடநாடா?.. 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!




அயர்லாந்து ஹாக்கி அணி மதுரையில் உற்சாக வரவேற்பு
14வது ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பையில் பங்கேற்க, அயர்லாந்து ஆண்கள் ஹாக்கி அணி நவம்பர் 22, 2025 அன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் என மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் இந்த அன்பான வரவேற்பால் ஆச்சரியடைந்த ஆயர்லாந்து வீரர்கள் பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு பேருந்தில் மதுரை காலவாசல் பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?
ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் நவம்பர் 22, 2025 இன்று மாலை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டிருப்பது,
தென் மாவட்ட ஹாக்கி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகவும், அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடையாகவும் இருக்கும் என்று விளையாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.