Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனக்கு தானே பிரசவம்.. பிறந்த சிசுவை கழிவறையில் அழுத்தி கொன்ற பெண்.. அரியலூரை உலுக்கிய சம்பவம்!

Ariyalur Infant Murder : அரியலூர் மாவட்டத்தில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண், பிறந்த பெண் குழந்தையை கழிவறையில் அழுத்தி கொலை செய்துள்ளார். பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனக்கு தானே பிரசவம்.. பிறந்த சிசுவை கழிவறையில் அழுத்தி கொன்ற பெண்.. அரியலூரை உலுக்கிய சம்பவம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 May 2025 11:49 AM

அரியலூர், மே 23 : அரியலூர் மாவட்டத்தில் பிறந்த பெண் குழந்தையை தாய் கொலை (Ariyalur infant murder ) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்குதானே மருத்துவமனை கழிவறையில் பிரசவம் பார்த்த பெண், கழிவறையில் குழந்தையை அழுத்தி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் வேதியராஜ் (49). இவருடன் மனைவி மற்றும 20 வயதான மகள் லாரா வசித்து வருகிறார். வேதியராஜுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், தாய் மற்றும் மகள் லாரா வீட்டில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், 20 வயதான லாரா அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று லாரா நீண்ட நேரமாக மருத்துவமனையில் காணவில்லை.

தனக்கு தானே பிரசவம்

இதனால், மருத்துவமனை  தூய்மை  பணியாளர்கள் அவரை தேடி அலைந்தனர். மருத்துவமனை கழிவறையில் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, லாரா இரத்தக் கறைகளுடன் கழிப்பறையில் நின்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, உடனே போலீசாருக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், லாராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது, 20 வயதான லாராவுக்கு அரியலூரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால், லாரா கர்ப்பமானார்.

பின்னர், அந்த இளைஞர் வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். லாரா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அரியலூர் மருத்துவமனைக்கு வேலைக்காக வந்த லாராவுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால், கழிவறைக்கு சென்ற லாரா, தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுத்திருக்கிறார்.

பிறந்த சிசுவை கழிவறையில் அழுத்தி கொன்ற பெண்

இதனை அடுத்து, திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றதால், அவமானத்தில் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, குழந்தை கழிவறைக்குள் அழுத்தி கொடூரமாக செய்துள்ளார். பிறந்த சில நிமிடங்களிலேயே பிஞ்சு குழந்தையை ஈரவு இரக்கமின்றி லாரா கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

விசாரணையின்போது, லாரா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, போலீசார் லாராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  பிறந்த குழந்தையை மருத்துவமனை கழிவறையை தாய் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் ரூ 75 கோடிகளை வசூல் செய்த டூரிஸ்ட் பேமிலி!
உலக அளவில் ரூ 75 கோடிகளை வசூல் செய்த டூரிஸ்ட் பேமிலி!...
கனிமொழியின் ரஷ்யா பயணத்தின் போது டிரோன் தாக்குதல்!
கனிமொழியின் ரஷ்யா பயணத்தின் போது டிரோன் தாக்குதல்!...
ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்தப் படம்...
ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்தப் படம்......
ஹோம் லோனுக்கான EMI கட்டலையா? இந்த 4 விளைவுகளை சந்திக்க நேரிடும்!
ஹோம் லோனுக்கான EMI கட்டலையா? இந்த 4 விளைவுகளை சந்திக்க நேரிடும்!...
தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா எப்போது?
தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா எப்போது?...
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு அம்மா ரோலில் இந்த நடிகையா?
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு அம்மா ரோலில் இந்த நடிகையா?...
சூர்யா - வெங்கி அட்லூரி படம்.. அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!
சூர்யா - வெங்கி அட்லூரி படம்.. அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!...
குரு பகவானின் ஆசி.. இந்த 6 ராசிக்கு பண மழை தான்!
குரு பகவானின் ஆசி.. இந்த 6 ராசிக்கு பண மழை தான்!...
மைசூர் பாக் இனி மைசூர் ஸ்ரீ...அண்ணே ஒரு கிலோ மைசூர் ஸ்ரீ கொடுங்க!
மைசூர் பாக் இனி மைசூர் ஸ்ரீ...அண்ணே ஒரு கிலோ மைசூர் ஸ்ரீ கொடுங்க!...
ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ
ஹிட் அடித்ததா டொவினோ தாமஸின் நரிவேட்ட படம்? விமர்சனம் இதோ...
திருச்சி அரசு பொருட்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள்?
திருச்சி அரசு பொருட்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள்?...