150 சவரன் கேட்டு சித்ரவதை… வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு.. மதுரையில் அதிர்ச்சி
Madurai Dowry Suicide : மதுரை மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 150 சவரன் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்த நிலையில், தூக்க மாத்திரை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பெண்
மதுரை, செப்டம்பர் 01 : மதுரையில் வரதட்சணை கொடுமையால் (Madurai Dowry Case) இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 150 சவரன் நகை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. நாட்டில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதுவும் சமீப நாட்களில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் சில விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும், சிலர் வரதட்சணை கொடுக்காததல் பெண்களை கொலை செய்தும் வருகின்றனர். இப்படியாக வரதட்சணை கொடுமை என்பது தலைவிரித்தாடுகிறது.
வரதட்சணை தொடர்பாக கடும் சட்டங்கள் இருந்தாலும், அதை கேட்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான், மதுரையில் அதிர்ச்சியூட்டும் சம்பபம் நடந்துள்ளது. அதாவது, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன்ராஜ். இவருக்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இரண்டு பேருக்கு 2024ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது, 300 சவரன் நகை மணமகன் வீட்டில் கேட்டுள்ளனர்.
Also Read : பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் குடித்த சிறுவன்.. வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
ஆனால், பெண் வீட்டார் திருமணத்தின்போது 150 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது. இதனால், திருமணம் முடிந்ததில் இருந்தே மீதமுள்ள 150 சவரன் நகை கேட்டு பெண் பிரியதர்ஷினியை துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினிடம் சண்டை போட்டு, அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை அதிகமானதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த பிரியதர்ஷினி, தன்னுடை தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதில், அவர் மயக்கமடைந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
Also Read : வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம்.. போலீஸ் வழக்குப்பதிவு!
இதனை தொடர்ந்து, வரதட்சணை கேட்டு வந்ததால் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, கணவர் ரூபன்ராஜ், அவரது பெற்றோர் இலங்கேவரன், தன்பாக்கியம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்காததல், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் தான், உடலை வாங்குவோம் எனவும் கூறி வருகின்றனர்.