தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை அப்டேட் இதோ..
Weather update: ஜனவரி 18 இன்று முதல் ஜனவரி 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

கோப்புப் படம்
சென்னை, ஜனவரி 18: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. தொடர்ந்து, பொங்கல் பண்டிகையில் இருந்து மழை இல்லாமல், வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் அதாவது, ஜனவரி 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்க : பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சம் – 2 நாட்களில் எவ்வளவு வசூல் இத்தனை கோடியா?
விடைபெறும் வடகிழக்கு பருவமழை:
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
இதனிடையே இன்று (ஜனவரி 18) முதல் அடுத்த 4 நாட்களுக்கு (ஜனவரி 22) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது. அதேசமயம், ஜனவரி 23ஆம் தேதியன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் முன்னறிவித்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை மாற்றம்:
அதேபோல், ஜனவரி 18 இன்று முதல் ஜனவரி 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தொடர்ந்து வரும் ஜனவரி 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
உறைபனி ஏற்பட வாய்ப்பு:
இன்று (18-01-2026) தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.