தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. கடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ..

Weather Forecast: நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை இருக்கக்கூடும். மார்ச் 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக லேசான மழை அல்லது சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. கடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

10 Mar 2026 06:34 AM

 IST

சென்னை, மார்ச் 10: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியல் உயர்ந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் காணப்பட்டது. அந்தவகையில், தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு:

அதன்படி, இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11ஆம் தேதி (நாளை) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை இருக்கக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

மார்ச் 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக லேசான மழை அல்லது சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை மாற்றம்:

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப நிலை வேறுபாடு 10-03-2024 முதல் 11-03-2026 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.

12-03-2026 மற்றும் 13-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மேலும் படிக்க: “விஜய் மக்கள் சந்திப்பை முடக்க சதி”.. தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு