தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை கொட்டும்.. வெப்பமும் உயரும்.. வானிலை நிலவரம் இதோ..

Weather Forecast: அதிகபட்ச வெப்பநிலையின் வேறுபாடானது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை கொட்டும்.. வெப்பமும் உயரும்.. வானிலை நிலவரம் இதோ..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

12 Mar 2026 06:32 AM

 IST

சென்னை, மார்ச் 12: தமிழகத்தில் மார்ச் 16ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்றைய தினம் (மார்ச் 11) தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்தத் திடீர் மழை காரணமாக அந்தப் பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதையும் படிக்க : 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு – பிரதமர் மோடி அறிவிப்பு

இன்று மழைக்கு வாய்ப்பு:

இது குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

தொடர்ந்து, நாளை மார்ச் 13 முதல் மார்ச் 16 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 17ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பு:

12 முதல் 15 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையின் வேறுபாடானது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.

இதையும் படிக்க : டெல்லி, மும்பைக்கு பின் சென்னைக்கு வந்த சேவை… ரூ.50-க்கு இத்தனை வசதியா?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சங்கமிக்கும் மாலை.. கன்னியாகுமரியில் நாளை நிகழும் அபூர்வ காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!
சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல்.. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..